Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

Published:Updated:
அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!

புத்தாண்டுக்கு உங்களை வரவேற்கிறேன். ஒரு திருவிழா போலவே மோட்டார் விகடனின் விருதுகள் தேர்வை மனம் லயித்து நடத்திக் கொடுத்ததற்கு, வாசகர்களாகிய உங்களுக்குத்தான் பல்லாயிரம் நன்றி. இந்த ஆண்டின் சிறந்த கார்/பைக் எது என்று உங்களின் ஐடியாவைப் பதிவு செய்வதற்கு, நீங்கள் காட்டிய ஆர்வமும் ஒத்துழைப்பும் எங்களை மலைப்பில் ஆழ்த்தியது என்பதே உண்மை. இதில் உங்களின் வேறுபட்ட எண்ணங்களையும், ஒன்றுபட்ட எண்ணங்களையும் ஒருசேரப் பார்க்க முடிந்தது. கூடவே ஆன்லைனிலும் உற்சாகமாக ஓட்டுக்களைப் பதிவு செய்தீர்கள். இதில் ஆச்சர்யம் – பல வாசகர்களின் எண்ணங்களும் எமது எண்ணங்களும் ஒரேபோல இருந்ததுதான். இந்த ஆண்டின் சிறந்த காரான செல்ட்டோஸுக்கும், சிறந்த பைக்கான ஜிக்ஸர் SF 250-க்கும், சிறந்த ஸ்கூட்டரான ஆக்டிவா 125-க்கும், பரிசு பெற்ற வாசகர்களுக்கும் வாழ்த்துகள்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இன்னொரு திருவிழாவான ஆட்டோ எக்ஸ்போ, இந்த ஆண்டு பிப்ரவரியில் நடக்க இருக்கிறது. ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் நரம்புகளைத் தூண்டும் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் உங்கள் மோட்டார் விகடனும் பங்கேற்கிறது. நாம் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கும் பல கார்களும், பைக்குகளும், ஸ்கூட்டர்களும் இங்கே அறிமுகமாக இருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட இருக்கும் வாகனங்கள்கூட கான்செப்ட் வாகனங்கள் என்ற பெயரில் இந்த எக்ஸ்போவில் இடம்பெற இருக்கிறது. ஆகையால், ‘இந்த ஆண்டு எக்ஸ்போவில் என்னென்ன கார்/பைக்குகள் கட்டாயம் பார்க்க வேண்டும்' என்ற லிஸ்ட் மிக முக்கியமானது. அந்தப் பட்டியலைத் தயாரிக்கும் வேலையில் எங்கள் டீம் இப்போதே மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறது. ஆகையால், அடுத்த இதழ் வந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்துவிடும். அதனால் உங்கள் கடைக்காரரிடம், உங்கள் பிரதியை இப்போதே ரிசர்வ் செய்துவிடுங்கள்.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்; ஆசிரியர்