இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ, இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி துவங்கி 12-ம் தேதி வரை டெல்லியை அடுத்திருக்கும் நொய்டாவில் நடக்கவிருக்கிறது. சென்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே எலெக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு ஏராளமாக இருந்தன. இந்த முறை அதைவிட அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். எம்ஜி மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், டிவிஎஸ் என்று பல கம்பெனிகள் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்ட நிலையில்... சற்றே பின்தங்கியிருக்கும் மற்ற நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றி தங்களுக்கு இருக்கும் எதிர்காலத் திட்டங்களைக் காட்சிப்படுத்த இருக்கின்றன. எனவே அடுத்தடுத்து அறிமுகமாக இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களும் இங்கே அணிவகுக்கப் போகின்றன.

பல்வேறு காரணங்களுக்காக ஒரு சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இந்த எக்ஸ்போவில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், இதில் பங்கேற்கும் கம்பெனிகள் உற்சாகமாக இருப்பது, அவை இங்கே காட்சிப்படுத்தப் போகும் வாகனங்களின் பட்டியலைப் பார்த்தாலே தெரிகிறது. பரந்து விரிந்திருக்கும் இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் 14 அரங்குகளில் நடக்கவிருக்கும் இந்த எக்ஸ்போவை, சரியான திட்டமிடல் இல்லாமல் சென்றால் முழுமையாகப் பார்க்க முடியாது. ஆகையால் இங்கே நிச்சயமாகப் பார்க்க வேண்டிய கார் மற்றும் பைக்குகள் என்ன... அந்த கார் மற்றும் பைக்குகளில் நீங்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன என்பதையெல்லாம், இந்த இதழில் தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.

பிப்ரவரி, 6, 7, 8-ம் தேதிகளில், டெல்லி பிரஹதி மைதானத்தில் நடக்கவிருக்கும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் கண்காட்சியும் முக்கியமானது. ஆட்டோ ஆர்வலர்கள் அதையும் தவறவிடக் கூடாது.

ஆட்டோமொபைல் தொடர்பான அத்தனை பங்குதாரர்களும் கலந்துகொள்ளும் இந்தக் கண்காட்சியில், உங்கள் மோட்டார் விகடனும் பங்கேற்கிறது. அறை எண் 11, ஸ்டால் எண் N48-ல் சந்திப்போம்.

அன்புடன்; ஆசிரியர்