Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

அப்பார்ட்மென்ட்வாசிகள், தங்கள் காம்பவுன்டைச் சுற்றி நிழல் தரும் மரங்களின் கன்றுகளை நட முயற்சி செய்யலாம்.

நமக்குள்ளே...

அப்பார்ட்மென்ட்வாசிகள், தங்கள் காம்பவுன்டைச் சுற்றி நிழல் தரும் மரங்களின் கன்றுகளை நட முயற்சி செய்யலாம்.

Published:Updated:
நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

தோ... ஆடி மாதமும் ஓடி வந்துவிட்டது. தமிழர்களுக்கு ஆடி என்றாலே தனி மகிழ்ச்சிதான். மழைக்காலத்துக்கு முன்னோட்டமாக சின்னச்சின்னதாகப் பெய்யும் மழை வழக்கம்போல ஆரம்பித்துவிட்டது. வறண்டு கிடக்கும் நீர்நிலைகளில் கொஞ்சம்போல நீர் நிறைய ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து மிக மோசமானதொரு வறட்சியைச் சந்தித்துக்கொண்டிருந்த நாம், இந்த ஆண்டு சற்றே மூச்சுவிடத் தொடங்கியிருக்கிறோம்.

ஆடி மாதம் நல்ல செயல்பாடுகளின் மாதமாகவே தமிழ் மரபில் தொடர்ந்து வருகிறது. `ஆடிப் பட்டம் தேடி விதை’, `ஆடி உழுது அடர விதை’, `ஆடி வாழை தேடி நடு’ என்று நம் பழமொழிகள் பெரும்பாலும் வேளாண்மைக்குரிய வளமையான மாதமாகவே ஆடியைப் பெருமையோடு சொல்கின்றன. இந்த மாதத்தின் புதுவெள்ளத்தைப் பயன்படுத்தி விதைப்பது எளிது. மழை நனைத்த மண்ணை உழுவதும் எளிது.

கிராமப்புறங்களில் ஆடி மாதமே பெரும் கொண்டாட்ட மாதம்தான். விதைக்கும் முன்பாக ஊர்கூடி இயற்கையை வணங்குவது, வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு, நம்மை வாழவைக்கும் நீர்நிலைகளை ஆடிப்பெருக்கு நாளன்று தேடிச்சென்று வழிபடுவது என இன்றும் தொடர்கின்றன அந்தக் கொண்டாட்டங்கள். நகர்ப்புறவாசிகளாக மாறிவிட்டவர்களுக்கு இந்தப் பசுமையான நினைவுகள் நிச்சயம் இருக்கும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சரி, என்ன செய்யப் போகிறோம் இந்த ஆடியில்?

`நம்மகிட்ட ஏக்கர் கணக்குல நிலமா இருக்கு, விதைக்க?’ என்கிற எண்ணம் இதை வாசிக்கும்போது பலருக்கும் தோன்றலாம். மனமிருந்தால் போதும்... நம்மைச் சுற்றி ஒரு துளிப் பசுமையையாவது உருவாக்கிவிடலாம். நகரங்களில் உள்ளவர்கள் மொட்டை மாடிகளிலும், பால்கனியிலும் காய்கறி விதைகளை மகிழ்வுடன் ஊன்றி வைக்கலாம். விதை, மண்ணை முட்டி மோதி துளிர்விட்டு, கிளை பரப்பி, பூத்துக் காய்ப்பதை அணு அணுவாக ரசிப்பது, பரபரப்பான நகர வாழ்க்கைக்கு மகிழ்வு `தெரபி'!

அப்பார்ட்மென்ட்வாசிகள், தங்கள் காம்பவுன்டைச் சுற்றி நிழல் தரும் மரங்களின் கன்றுகளை நட முயற்சி செய்யலாம். புறநகர்ப் பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டுவாசல்களில் புங்கை, ஆல், வேம்பு, நாவல் என்று நம் மண்ணுக்குரிய மரங்களை நடலாம்.

`மழை இல்லை’ என்று நாளை வருந்துவதற்குப் பதில், இன்றே மரங்கள் நடுவது நல்லது. மரங்கள்தானே நமக்கு மழை தரும்!

‘ஆடி பெருக்கும்’ என்று சொல்வது, வெறும் சொலவடை அல்ல, முன்னோர்கள் வகுத்துவைத்த உன்னத சூத்திரம் என்பதை நிரூபிப்போம்!

நமக்குள்ளே...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism