ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

கோவிட்-19 யார் யாரையெல்லாம் பாதிக்கும் என்ற கேள்விக்கான விடையைப் பட்டியலிட்டால்... அதில் கார்/பைக்ஸ் ஆகியவைகூட உண்டு.

கொரோனா காலத்தில் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் வாகனங்களை, ஊரடங்கு முடிந்த பிறகு அவசிய/ அவசரக் காரணங்களுக்காக வெளியே எடுக்க நேர்ந்தால்... அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வீஸ் சென்டர்கள் திறக்கப்படும்போது... வழக்கத்துக்கு மாறாக ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிவார்கள்.அந்தக் கூட்ட நெரிசலில் முட்டி மோதி நம் காரையும், பைக்கையும் சர்வீஸ் விடுவது ஒரு சவாலாகவே இருக்கப் போகிறது. `இந்தக் கூட்டமெல்லாம் அடங்கட்டும்; பொறுமையாக நம் கார்/பைக்கை சர்வீஸ் விட்டுக் கொள்ளலாம்’ என்று நினைப்பவர்களும் இங்கே உண்டு. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, இந்த இதழில் ஒரு சில அவசியமான வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறோம்.

கார், பைக் வாங்குவதற்கு இது சரியான தருணமா இல்லையா என்பதை, வைரஸ் அச்சம் முடிந்தபிறகு, கார் கம்பெனிகள் அறிவிக்கவிருக்கும் விலை, சலுகைகள் மற்றும் திட்டங்கள் தீர்மானிக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி; இனி செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்புள்ள காரைத் தேர்ந்தெடுப்பதில் வாடிக்கையாளர்கள் கவனமாக இருப்பார்கள். அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய கார்கள் எவை, விலை குறைவான கார்கள் எவை, பாதுகாப்பான கார்கள் எவை, டர்போ இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கள் எவை... எனப் பல அளவுகோல்களை வைத்தே கார்/பைக் ஆகியவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் முடிவெடுப்பார்கள். அவர்களின் வசதிக்காக இது பற்றி எல்லாம் அலசி ஆராய்ந்து பல கட்டுரைகளைத் தந்திருக்கிறோம்.

புதிதாக வந்திருக்கும் டாடா ஹேரியர் ஆட்டோமேட்டிக் காரால், ஜீப் காம்பஸோடு போட்டியிட முடியுமா என்ற கேள்வி துவங்கி, கியா செல்ட்டோஸ், ஹூண்டாய் i20, ஹூண்டாய் வெர்னா, பிஎம்டபிள்யூ X1 வரை பல கார்களின் ஃபர்ஸ்ட் லுக் ரிப்போர்ட்டையும் இந்த இதழில் தந்திருக்கிறோம்.

`நம் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய கார்/பைக் எது’ என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை காண ஆழ்ந்து படிப்பதற்கும், அலசி ஆராய்வதற்குமான நேரம் இதுதான்.

அன்புடன்

ஆசிரியர்