Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

ன்னதான் `கொரோனா’, `லாக்டவுன்’ என்று இருந்தாலும், மகிழ்ச்சியான செய்திகளும் உற்சாகம் கொடுக்கக்கூடிய பல நல்ல விஷயங்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. சமூக இடைவெளி, `வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்று பல புதிய கட்டுப்பாடுகளை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில்...

புதிய கார்களையும் பைக்குகளையும் பார்ப்பது பெரிய ஆறுதலாக இருக்கிறது. அந்த வகையில் ஆச்சரியப்படும் விலையில் அறிமுகமாகியிருக்கும் ஸ்கோடாவின் புதிய ரேபிட் மற்றும் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் ஆகிய இரண்டு கார்களின் டெஸ்ட் ரிப்போர்ட் உங்களுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும். டிவிஎஸ் ஸ்டார் சிட்டியின் BS-6 வேரியன்ட்டும் எப்படி இருக்கிறது என்பதையும் இந்த இதழில் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இப்போது இன்னொரு மகிழ்ச்சியான செய்திக்கு வருவோம். ஆம்! கடந்த மாதம் நடைபெற்ற, `ஒரு கார், ஒரு கனவு’ பயிலரங்கத்தைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். இணையம் வழியாக நடந்த இந்த வொர்க்‌ஷாப்பில் வழக்கம்போல பல மாநிலங்களில் இருந்தும், ஏன் பல நாடுகளில் இருந்தும்கூட பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். பயிலரங்கம் நடைபெற்ற ஐந்து நாட்களும் ஆரம்பம் முதல் கடைசி வரை அத்தனை பேரும் ஆர்வத்தோடு பங்கெடுத்தார்கள். பயிலரங்கின் இறுதிநாள் அன்று, கால அளவுகளை எல்லாம் தாண்டியும் கேள்வி-பதில் பகுதியை முடிவே இல்லாமல் நீட்டித்துக் கொண்டு சென்றது, கார் டிசைன் பற்றிய அவர்களின் ஆர்வத்துக்கு அத்தாட்சியாக விளங்கியது.

கடந்த பயிலரங்கத்தைப் போலவே இதிலும் பல பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களோடு கலந்து கொண்டார்கள். இதில் ஒரு சில மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் பங்கேற்றார்கள். இந்தப் பள்ளி மாணவர்களிடம் பேசியபோதுதான் கார் பற்றிய அறிவு, தெளிவு, கனவு ஆகியவை - கல்லூரி மாணவர்களுக்கு நிகராக பள்ளி மாணவர்களுக்கும் இருப்பது புலப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு என பிரத்யேகமாக கார் டிசைன் பயிலரங்கம் நடத்த வேண்டியதன் அவசியமும் புரிந்தது.

பள்ளி மாணவ மாணவியருக்கான பிரத்யேகப் பயிலரங்கத்தின் விவரங்கள் அடுத்து வரும் பக்கங்களில்....

அன்புடன்

ஆசிரியர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz