Published:Updated:

இது வரலாற்று அநீதி!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

இது வரலாற்று அநீதி!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
பல்வேறு மொழிகள், பல்வேறு சாதிகள், பல்வேறு மதங்கள், பல்வேறு கலாசாரங்கள் என்று பன்மைத்துவம் பேணும், மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குவதை உலகமே ஆச்சர்யத்துடன் பார்க்கிறது. இந்தியாவின் வலிமையே இந்தப் பன்மைத்துவமும் வேற்றுமையில் ஒற்றுமையும்தான். ஆனால், மத்திய அரசின் சமீபத்திய செயல்பாடு இந்தப் பெருமிதத்தைக் குலைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியக் கலாசாரம் பற்றி ஆராய மத்திய அரசு உருவாக்கியுள்ள கலாசாரக் குழுவில், தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறவில்லை என்பதும், பல்வேறு கலாசாரங்களுக்கான பிரதிநிதிகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத செயல்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 19,500-க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 121 மொழிகளைப் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பேசுகிறார்கள். ஒவ்வொரு மொழிக்குப் பின்னாலும் நீண்ட நெடிய வரலாறும் கலாசாரமும் இருக்கிறது. ஆனால், தற்போது மத்திய அரசு நியமித்துள்ள 16 பேர் கொண்ட குழுவில் பெரும்பாலானோர் வடஇந்தியாவைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள். 6 பேர் சம்ஸ்கிருத மொழியறிஞர்கள். தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு மொழியறிஞர், தொல்லியல் அறிஞர்கூட இந்தக்குழுவில் இல்லை.

இந்தக்குழு அளிக்கும் அறிக்கை நாளை சட்டபூர்வமான வரலாறாக மாறலாம். பாடப்புத்தகங்களிலும் இடம்பெறலாம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குழு இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் கலாசாரங்களை முற்றிலும் புறக்கணிக்கும் குழுவாக அமைவது வரலாற்றுக்கும் இந்தியாவின் பன்மைத்துவத்துக்கும் இழைக்கப்படும் அநீதி.

இது வரலாற்று அநீதி!

அதிலும் தென்னிந்தியாவை முற்றிலும் புறக்கணிப்பது என்பது இந்தியாவின் ஒருபாதிக் கலாசாரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல். தென்னிந்திய மொழிகளுக்கு வேராக விளங்கும் தமிழ்மொழி, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று. சிந்துசமவெளி நாகரிகத்துக்கு இணையான வரலாற்றுத்தொன்மை வாய்ந்தது தமிழர்களின் நாகரிகம் என்பதைக் கீழடி ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஏற்கெனவே மத்திய அரசால் போடப்பட்ட பல முட்டுக்கட்டைகளைத் தாண்டித்தான் இந்த அகழாய்வுகள் நடந்திருக்கின்றன. இப்போது தொன்மைவாய்ந்த தமிழர்களின் வரலாற்றையும் கலாசாரத்தையும் முற்றிலும் புறக்கணித்து, வரலாறு பற்றி ஆராய ஒரு குழுவை அமைப்பது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

இந்தக் கலாசாரக் குழுவை மாற்றி அமைக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் 32 எம்.பி-க்கள் இந்தக் குழுவை மாற்றியமைக்குமாறு குடியரசுத்தலைவரிடம் முறையிட்டிருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகளின் குரல்களுக்கு மதிப்பளித்து மத்திய அரசு இந்தக் குழுவைக் கலைத்துவிட்டு இந்தியாவின் எல்லாக் கலாசாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய குழுவை அமைப்பதே வரலாற்றுக்குச் செய்யும் நியாயம். அப்படிப் புதிய குழு அமைக்கப்பட்டாலும் அந்தக் குழு, வரலாற்று ஆய்வைமட்டுமே கருத்தில்கொண்டதாகவும் எந்தவித சர்ச்சைக்கும் இடமளிக்காதவகையிலும் அமையவேண்டியது முக்கியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism