Published:Updated:

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஆசிரியர் பக்கம்

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே!

ஆசிரியர் பக்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

கோவை கரி மோட்டார் ஸ்பீட்வேயில், CRA மோட்டார் ஸ்போர்ட்ஸுடன் இணைந்து, மோட்டார் விகடன் நடத்திய ரேஸ் தொடர்பான பயிலரங்கத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருமே, புதிய உலகத்தைப் பார்த்த திகைப்பில் இருக்கிறார்கள். ரேஸ் ஃபோட்டோகிராஃபி, ரேஸ் மார்ஷல் மற்றும் ரேஸிங் டீம் மேனெஜ்மென்ட் ஆகியவை பற்றி நடந்த 3 நாள் பயிலரங்கம் வெறுமனே தியரியாக இல்லாமல், ரேஸ் நடக்கும் மைதானத்தில், ரேஸ் நடக்கும்போது செயல்முறைப் பயிற்சியாகவும் நடைபெற்றது. கண் இமைக்கும் நேரத்தில் நம்மைக் கடந்து செல்லும் பைக்குகளை புகைப்படக் கருவிக்குள் Panning shot ஆக எப்படி சிறைப் பிடிப்பது, புகைப்படங்களுக்கு Depth கொடுக்க Aperture Priority மோடில் எப்படி பேலன்ஸ் செய்வது, `ரூல் ஆஃப் தேர்டு’ கெடாமல் எப்படி க்ராப் செய்து எடிட் செய்வது என்று பல விஷயங்களைப் பெரும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டார்கள்.

அதேபோல ரேஷ் மார்ஷலிங் வேலை என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வேலை? அதில் என்னென்ன கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன? அந்தக் கொடிகளின் வண்ணங்களுக்கு என்ன அர்த்தம்? அவற்றை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் பயிலரங்கத்துக்கு வந்தவர்கள் கற்றுக் கொண்டனர். மார்ஷ்ல்ஸிலேயே Flag Marshals, Intervention Marshals, Post Marshals என்று பலவகையான மார்ஷல்ஸ் இருக்கின்றனர்.இவர்களின் வேலை என்ன என்பதை எல்லாம் கற்றுக் கொண்டதோடு, ரேஸ் மைதானத்தில் மார்ஷல்ஸாகவே மாறி அவர்கள் அந்த வேலைகளைச் செய்தபோது, அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

இந்தப் பயிலரங்கங்கள் அனைத்தும் பெருந்தொற்றின் இரண்டாவது ஆலை ஆரம்பிப்பதற்கு முன்னரே நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டன. அதேசமயம் பெருந்தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டியது கட்டாயம்தான் என்றாலும், புதிய அனுபவங்களைத் திரட்டாமல் இருக்க முடியாது.

அதனால், மாணவர்களின் ஆர்வத்துக்குக் களம் அமைத்துக் கொடுக்கும்விதமாக இதுபோன்ற பயிலரங்கங்களை மோட்டார் விகடன் சிறிது காலத்துக்கு ஆன்-லைனில் தொடர்ந்து ஏற்பாடு செய்யும். இந்த வரிசையில் கார் டிசைனிங் பற்றிய பயிலரங்கத்தை மே மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மீண்டும் நடத்தவிருக்கிறது. ஆன்லைனில் நடக்கவிருக்கும் இதைப் பற்றிய விவரங்கள் அடுத்துவரும் பக்கங்களில் இருக்கின்றன. இந்த விவரங்களை கார் டிசைனிங் பற்றி ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
ஆசிரியர்