Published:Updated:

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே!

அன்பு வணக்கம்!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால், இந்தப் பருவத்தில் ஆட்டோ எக்ஸ்போ முடிவுற்று அதன் தொடர்ச்சியாக பல புதிய கார்களும் மோட்டார் சைக்கிள்களும் வரிசையாக விற்பனைக்கு வந்திருக்கும். என்றாலும், இப்போது நமக்குக் கிடைக்கும் ஆறுதலான செய்தி என்னவென்றால், பெருந்தொற்றுக் காலம் முடிவுக்கு வருவதற்கான சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. இந்த நேரத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கியா காரன்ஸ் விற்பனைக்கு வந்திருக்கிறது. 7 சீட்டர் செக்மென்ட்டில் விற்பனைக்கு வந்திருக்கும் அதன் ஆரம்ப அறிமுக விலை பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் அதன் மூன்றாவது வரிசை இருக்கைகள் சற்றே தாராளமாகப் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு இருப்பதால், அது வாடிக்கையாளர்களை மகிழ்வித்திருக்கிறது.

அதனால் இந்தத் தருணத்தில் கியா காரன்ஸுக்கு மாற்றாக என்னென்ன கார்கள் எல்லாம் விற்பனையில் இருக்கின்றன? எந்தக் கார் யாருக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை விரிவாக இந்த இதழில் அலசியிருக்கிறோம். அதேபோல அண்மையில் வெளியான டாடா பஞ்ச் காருக்குப் போட்டியாக இருக்கும் கார்கள் என்னென்ன... இதில் எந்தக் கார் யாருக்கு உகந்ததாக இருக்கும் என்ற அலசலையும் இந்த இதழில் அளித்திருக்கிறோம்.

மாருதி சுஸூகியில் இருந்து வெளியாகியிருக்கும் நியூ ஏஜ் பெலினோ மைலேஜில் தொடர்ந்து, தான் ஒரு கில்லி என்பதைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது. ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, கனெக்டெட் டெக்னாலஜி என்று நவீனமான தொழில்நுட்ப வசதிகளை இந்த பட்ஜெட் காரில் அளிக்க முனைந்திருக்கிறது. இதையடுத்து ஸ்கோடாவின் ஸ்லாவியாவும் பல புதிய ஆச்சரியங்களோடு களம் காண இருக்கிறது.

ஆக, புதிய கார்களின் அறிமுகம் மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கியிருப்பது புதிய ஆரம்பத்தின் துவக்கமாக இருக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism