Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

பெண் பிள்ளைகள் கை கால் வீசி மைதானங்களில் விளையாட, வீட்டில் அனுமதி கிடைப்பதே அரிது.

நமக்குள்ளே...

பெண் பிள்ளைகள் கை கால் வீசி மைதானங்களில் விளையாட, வீட்டில் அனுமதி கிடைப்பதே அரிது.

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் தடகள வீராங்கனை, 18 வயதாகும் சமீஹா பர்வீன். செவித்திறன் குறைபாடுடைய இவர், இம்மாதம் போலந்தில் நடக்கவிருக்கும் நான்காவது சர்வதேச செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் கலந்துகொள்வதற்கான தேசிய அளவிளான தகுதிச் சுற்றில் தேர்ச்சி பெற்றார். நீளம் தாண்டுதலில் இலக்கு 4.2 மீட்டர். சமீஹா தாண்டியது 5 மீட்டர். ஆனாலும், அவர் போலந்து போட்டியில் கலந்துகொள்வதிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். காரணம், அவர் ஒரு பெண் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

இந்தியாவிலிருந்து ஐந்து ஆண்களுடன், சமீஹா ஒரே ஒரு பெண்ணாகத் தகுதிச் சுற்றில் தேர்வு பெற்றிருக்கிறார். ஐந்து ஆண்களுடன் ஒரு பெண்ணை மட்டும் போலந்துக்கு அழைத்துச் செல்வது, பாதுகாப்பாளர், செலவுகள் உள்ளிட்ட காரணங்களால் சிரமம் என்று கூறி தன்னை இந்திய விளையாட்டுக் கழகம் (Sports Authority of India - SAI) புறக்கணித்தது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சமீஹா. அதை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிமன்றம், சமீஹாவை போலந்து சர்வதேசப் போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

பெண் பிள்ளைகள் கை கால் வீசி மைதானங்களில் விளையாட, வீட்டில் அனுமதி கிடைப்பதே அரிது. அப்படியே கிடைத்தாலும், அவர்களை மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான போட்டிகள் எனப் பெற்றோர் அழைத்துச் செல்வதும், அதற்கு செலவழிப்பதும் அரிது. திறமை இருந்தும், இந்தத் தடைகளிலேயே பல பெண்களும் டிராக்குகளில் இருந்து தளர்ந்து ஒதுங்கிவிடுவார்கள். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, ஒரு மாற்றுத்திறன் பெண் சர்வதேசப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார் என்றால் அவரும், டீக்கடைக்காரரான அவர் அப்பாவும் கடந்து வந்திருக்கும் அனல் போராட்டத்தைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அரசோ, தகுதி இருந்தும் பெண் என்ற ஒரே காரணத்தால் அவரது சர்வதேசப் போட்டி வாய்ப்பைப் பொறுப்புணர்வே இல்லாமல் புறக்கணித்தது அவலம்.

நமக்குள்ளே...
நமக்குள்ளே...

இதுபோன்ற எத்தனையோ பாலினப் பாகுபாடுகளைக் கடந்துதான், நம் இந்தியப் பெண்கள் ஒலிம்பிக் வரை செல்கிறார்கள். ஆனால், அவர்கள் ஜெயிக்க வேண்டியது போட்டியில் மட்டுமல்ல. போட்டிக்கு முன்னதாக, இந்த ஆணாதிக்க சமுதாயம் தன் மீது திணிக்கும் பல போராட்டங்களில் அவர்கள் ஜெயிக்க வேண்டியிருக்கிறது. அவற்றிலெல்லாம் தங்களைத் தோல்வியுறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால்தான், ஆண்களின் வெற்றியைவிட பெண்களின் வெற்றி மதிப்புக் கூடுகிறது... எல்லா துறைகளிலும்.

இன்று ஒலிம்பிக்கில் மெடல் சூடி வந்திருக்கும் நம்நாட்டுப் பெண்கள் அனைவருக்குப் பின்னும் பாலினப் பாகுபாடு, பாலின அடக்குமுறை, பாலியல் தொல்லைகள் எனப் பல பின்னணிக் கதைகள் புதையுண்டு இருக்கலாம். பெண் என்பதாலேயே பறிக்கப்படும் வாய்ப்புகளை, வெற்றிகளை எதிர்த்துக் கேட்கப்படும் கேள்விகளே அதற்கான முதற்கட்டத் தீர்வு தோழிகளே. வாய்பேச முடியாத சிறுமி சமீஹா இப்போது அந்த எதிர்க்கேள்வியைக் கேட்டு தனக்கான நியாயத்தைப் பெற்றிருக்கிறார். உரிமை மறுப்புக்கு எதிரான நம் குரல்களும் முழங்கட்டும் தோழிகளே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism