Published:Updated:

நமக்குள்ளே

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

பெண்கள், இயல்பிலேயே பொறுமையும் பக்குவமும் நிறைந்தவர்கள். பிரச்னைகளை எதிர்கொள்வதில் பதற்றம் தவிர்ப்பவர்கள்.

நமக்குள்ளே

பெண்கள், இயல்பிலேயே பொறுமையும் பக்குவமும் நிறைந்தவர்கள். பிரச்னைகளை எதிர்கொள்வதில் பதற்றம் தவிர்ப்பவர்கள்.

Published:Updated:
நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

ஒட்டுமொத்த உலகையும் நடுநடுங்க வைத்து, உத்தரவாதமில்லாத எதிர்காலத்துக்குள் தள்ளிக்கொண்டே இருக்கிறது ‘கோவிட் 19’ கொரோனா வைரஸ்.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பெரு, மெக்ஸிகோ, கொலம்பியா, ஸ்பெயின், சிலி ஆகிய நாடுகள் நோய்த்தொற்று பாதிப்பில் முதல் 10 இடங்களை வகிக்க, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திய வகையில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன டென்மார்க், ஃபின்லாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து, நியூசிலாந்து, நார்வே ஆகிய ஆறு நாடுகளும்!

இந்த பத்து மற்றும் ஆறு நாடுகளுக்கிடையே இருக்கும் ஒரு வேறுபாடு... பெண்கள் உலகத்தைப் பெருமைகொள்ள வைக்கிறது. அந்தப் பத்து நாடுகளை ஆள்பவர்கள், ஆண்கள். இந்த ஆறு நாடுகளை ஆள்பவர்கள், பெண்கள்.

நமக்குள்ளே

கொரோனா... உலகுக்கே புதிய சவால். மக்களின் பயத்தைப் போக்கி, நம்பிக்கையையும் நோயை விரட்டும் விஷயத்தில் நல்ல நிர்வாகத்தையும் தர வேண்டியதுதான் நாட்டுத் தலைவர்களின் பொறுப்பு. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரேசில் அதிபர் போல்சனாரோ உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கொரோனாவை அணுகிக்கொண்டிருக்கும் விதம், இன்றளவிலும் சர்ச்சைக்கும் கேலிக்கும் உள்ளாகித்தான் கிடக்கிறது. அதேநேரம், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், கோவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலைக் குறிக்கும் ஆர்.நாட் அளவுடன் அறிவியல்ரீதியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி, நம்பிக்கை விதைத்தார். கொரோனாவின் முதல் அலையில் 22 உயிரிழப்புகளோடு நிலைமையைக் கட்டுப்படுத்தி, கொரோனா இல்லாத நாடாக அறிவித்தார் நியூசிலாந்தின் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன்.

இங்கிலாந்து நாட்டிலிருக்கும் லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுப்ரியா கரிக்கிபாதி, ரீடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமா கம்பம்பதி இருவரும் கொரோனா தொடர்பாக உலக அளவில் பகுப்பாய்வை மேற்கொண்டனர். மக்கள்தொகை, பாலின சமத்துவம், முதியோர் எண்ணிக்கை எனப் பல்வேறு காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில்தான், ‘ஆண்கள் தலைமையிலான நாடுகளைவிட, பெண்கள் தலைமை வகிக்கும் நாடுகளில் கொரோனா தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன’ என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

பெண் தலைவர்களின் யதேச்சதிகாரமற்ற, ஜனநாயகரீதியிலான அணுகுமுறையே இதற்கு காரணம். அதேநேரம், ‘கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டோம்’ என்று இந்தத் தலைவர்கள் யாரும் கைத்தட்டிவிட்டு ஒதுங்கி உட்காரவில்லை. ‘மீண்டுமோர் அலை வரலாம், வந்தால் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்’ என்று தாய்மையுள்ளத்தோடு சுழன்றபடியே உள்ளனர்.

பெண்கள், இயல்பிலேயே பொறுமையும் பக்குவமும் நிறைந்தவர்கள். பிரச்னைகளை எதிர்கொள்வதில் பதற்றம் தவிர்ப்பவர்கள். சூழலை இலகுவாக எதிர்கொள்பவர்கள். அது வீடாக இருந்தாலும்... நாடாக இருந்தாலும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism