Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

நம் வீடுகளில் பெரும்பாலும் ராணுவம் அல்லது காவல்துறைப் பணிக்குப் பெண்கள் செல்வதை விரும்புவதில்லை.

நமக்குள்ளே...

நம் வீடுகளில் பெரும்பாலும் ராணுவம் அல்லது காவல்துறைப் பணிக்குப் பெண்கள் செல்வதை விரும்புவதில்லை.

Published:Updated:
நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

இந்தியா, தன்னுடைய 71-ம் ஆண்டுக் குடியரசு நாளை வருகிற 26-ம் தேதியன்று கொண்டாடவிருக்கிறது. அந்த நாளை கூடுதல் உற்சாகத்துடன் நாம் கொண்டாட வேண்டிய அவசியத்தை உருவாக்கியிருக்கிறார், 26 வயதான கேப்டன் டான்யா ஷெர்கில். ஆம், அன்றைய நாளில் இந்தியாவே பிரமிப்போடும் மரியாதையோடும் பார்த்துப் பரவசப்படும் பெருமைக்குரிய `ராணுவ அணிவகுப்பை தலைமை தாங்கி வழிநடத்தவிருக்கும் முதல் பெண்' என்ற சிறப்பைப் பெறுகிறார் டான்யா ஷெர்கில்... ராணுவத் தொலைத்தொடர்பு அமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான சிக்னல் பிரிவைச் சேர்ந்தவர். இவர் நான்கு தலைமுறைகளாக ராணுவப் பணியாற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் போற்றுதலுக்குரிய ஒன்று!

ஒட்டுமொத்த ராணுவ அணிவகுப்புக்கும் தலைமை தாங்கப்போகிறார் டான்யா. குழுக்களின் நேரம் தவறாமை, ஒழுக்கம், பயிற்சி போன்றவற்றுக்கு முழுப்பொறுப்பும் ‘பரேட் அட்ஜுடன்ட்’ டான்யா வசம்தான். நாட்டின் குடியரசு நாள் நிகழ்ச்சியில் ஒரு பெண் வழிநடத்த, மற்ற வீரர்கள் பின்செல்வது இதுவே முதன்முறை. ஒவ்வொரு பெண்ணும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம் வீடுகளில் பெரும்பாலும் ராணுவம் அல்லது காவல்துறைப் பணிக்குப் பெண்கள் செல்வதை விரும்புவதில்லை. ஹரியானா, பீகார் போன்ற மாநிலங்களில் பெண்களை இதற்கெனப் பயிற்சி மையங்களில் சேர்ப்பது, ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்துவது என்று ஆர்வம்காட்டும் பெற்றோர் அதிகம் உண்டு. நாமோ ‘பெண் பிள்ளைக்கு விளையாட்டு எதற்கு?’, ‘படித்து மருத்துவரோ, பொறியாளரோ ஆனால்தானே பெண்ணுக்குப் பாதுகாப்பு’, ‘அரசுத்துறை, ஆசிரியப் பணி போன்றவையே பெண்ணுக்கு ஏற்ற துறைகள்’ என்பது போன்ற சில மாயைகளை உருவாக்கிவைத்திருக்கிறோம்.

ஆணுக்கும் இதுபோன்ற சிக்கல்கள் இருக்கின்றன. இசை, நடனம், சினிமாத் துறைகளில் பயிலும் ஆண் பிள்ளைகளை சமூகம் எப்படி அணுகுகிறது... அதே போலத்தான் பெண்ணுக்கான துறைகள் இவை என்ற பொதுமைப்படுத்தலும். இதற்கு உடல்வாகு, ‘மெல்லிய’ இயல்பு போன்றவை காரணமாகச் சொல்லப்படுகின்றன. உண்மை அதுவல்ல என்பதுதானே நாம் கண்கூடாகப் பார்க்கும் உண்மை?

முறையான பயிற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால், எந்தப் பணியையும் யாரும் செய்யலாம்... எந்தத் துறையிலும் மிளிர முடியும் என்கிற எண்ணத்தை நம் குழந்தைகளுக்கு விதைக்க வேண்டும். டான்யா போன்ற சாதனையாளர்கள் நமக்கு உணர்த்துவதும் அதைத்தானே!

நமக்குள்ளே...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism