அனைவருக்கும் பசுமை வணக்கம்!

`பூனை, தான் கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடும் என்று நினைத்துக்கொள்ளுமாம்’ என்றொரு சொலவடை உண்டு. அதேபோலத்தான், ‘நம்முடைய அதிகாரத்தை நீட்டினால், டெல்லி விவசாயிகள் போராட்டம் தூள் தூள்’ என்று நினைத்துக்கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. ஆனால், உலக வரைபடத்தில் சிறு புள்ளியாக உள்ள நாடுகளிலிருந்துகூட விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு கரம் நீண்டு வருகிறது.

‘டெல்லிக்கு அருகில் சில சர்தார்ஜிகள் சேர்ந்து கோஷம் போடுகிறார்கள். சில நாள்களில் கோதுமை அறுவடை செய்ய பஞ்சாப்புக்குப் புறப்பட்டுவிடுவார்கள்’ என்று பி.ஜே.பி அரசு தப்புக் கணக்குப் போட்டுவிட்டது.

‘விவசாயிகள் போராடும் இடங்களில் இணையதளச் சேவை முடக்கப்பட்டுள்ளது’ என்ற செய்தியைப் பகிர்ந்து, `இதுபற்றி நாம் ஏன் பேசவில்லை?’ என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா, தனது ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். உடனே இந்தச் செய்தி உலகம் முழுக்கப் பற்றிக்கொண்டது. பல்வேறு துறையினரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

இப்படி இந்தியாவுக்கு வெளியிலிருந்து ஆதரவு பெருகிவரும் சூழலில், ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க’ கிரிக்கெட் வீரர்களும் திரைப்பட நடிகர்களும் மத்திய அரசுக்கு ஆதரவாகப் பொங்கிப் பேசி, மூக்கு அறுபட்டு நிற்கிறார்கள். இதில் அதிகம் அசிங்கப்பட்டுப்போனது ஆடுகளத்தில் சிறந்த வீரர் என்ற பெயர்பெற்ற சச்சின் டெண்டுல்கர்தான்.

‘இந்தியாவின் மானம் பறிபோகிறது’ என இப்போது பொங்கியெழும் இவர்போன்ற ‘மைதானப் புலிகள்’, கோவணமும் உருவப்படும் சூழலிலிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக முதலிலேயே குரல் எழுப்பியிருக்கலாமே?

மாதக் கணக்கில் நீண்டு வரும் விவசாயிகளின் போராட்டத்தைப் புரிந்துகொண்டு, மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கலாமே?

இவற்றையெல்லாம் செய்திருந்தால், இவர்களுடைய ‘தேசபக்தி’க்கும் மரியாதை கிடைத்திருக்கும். இவர்கள் நினைக்கும் ‘தேசிய மானமும்’ காற்றில் பறக்காமலிருந்திருக்கும்!