ஜெய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்று கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

அதன் ஆய்வறிக்கையின்படி, குழந்தைகள் சராசரியாக தினமும் இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வரை கேட்ஜெட்டுகளுடன் செலவழிக்கின்றனர். இது முன்பிருந்ததைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். 65 சதவிகித குழந்தைகள் மின்னணுக் கருவிகளுக்கு அடிமையாகி இருப்பதாகவும், 50 சதவிகித குழந்தைகளால் அரை மணிநேரம்கூட தங்கள் ஃபேவரைட் கருவிகளிடமிருந்து விலகியிருக்க முடிவதில்லை என்றும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மின்னணுக் கருவிகளிடமிருந்து அவர்களைக் கட்டாயப்படுத்தி விலக்கினால், தேவையற்ற கோபம், அழுகை, பெற்றோர் சொல் கேளாமை, எரிச்சல் போன்றவற்றை வெளிப்படுத்துகிறார்களாம்.

லாக் டெளனுக்குப் பிறகு 45 சதவிகித குழந்தைகளின் இரவுத் தூக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்காக இதுபோன்ற கருவிகளைக் குழந்தைகள் வசம் ஒப்படைக்கிறோம். அப்போது குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதையும் மேற்பார்வையிடுகிறோம். ஆனாலும், உணவு இடைவேளை, உறங்கச் செல்லும்முன், ஓய்வறைகளில் என்று எங்கும் நீக்கமற இந்தக் கருவிகளுடன்தாம் நம் குழந்தைகள் நேரத்தைச் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால், தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே கேட்ஜெட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தை எப்பாடுபட்டாவது அமல்படுத்தியே ஆக வேண்டும். வகுப்பு நேரம் தவிர ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்ள அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ இந்தக் கருவிகள் குழந்தைகள் வசம் இருந்தால் போதும்தானே?

லாக் டெளன் என்றாலும், நம் வீடுகளில் முடங்கியிருக்கும் விவரம் அறியாத குழந்தைகளுக்கு எப்போதும் போல இதுவும் விடுமுறைக் காலம்தான். கூடியவரை அவர்களுக்கு உடல் உழைப்பை ஊக்குவிக்கும் சிறு வேலைகளைக் கொடுக்கலாம். ஆண் குழந்தைகளையும் சமையலறைக்குள் இறக்கிவிடுவது சிறப்பு.

நாமும் குழந்தையாகவே மாறி நம் குழந்தைகளுடன் ஷட்டில், கிரிக்கெட் என இருக்கும் இடத்தைப் பொறுத்து விளையாடலாம். மாலை நேரங்களில் ஏதேதோ கதைகள் பேசியபடி மொட்டை மாடிகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இது அனைவருக்குமே நன்மை பயக்கும். டெக்னாலஜியில் ஆர்வம்கொண்ட குழந்தைகள் என்றால், அவர்களுடன் அமர்ந்து வீட்டில் இருக்கும் கருவிகளைப் ‘பிரித்து கோத்து’ நேரம் செலவழிக்கலாம்.

குழந்தைகளின் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் பயந்து கேட்ஜெட்டுகளை அவர்கள் கைகளில் திணிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக அவர்களின் உற்ற நட்பாக, ‘அலெக்சா’க்களாக நாமே இருக்க வேண்டும். இயந்திரங்களுடன் கதைக்கும் இரும்பு மனிதர்களாக இல்லாமல், பூக்களுடன் பேசும் சிட்டுகளாக நம் குழந்தைகளை மாற்ற வேண்டியது நல்ல பெற்றோரான நம் பொறுப்புதான்!