பிரீமியம் ஸ்டோரி
‘‘எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 12-ம் தேதி சரியான தேதியில் தண்ணீர்த் திறக்கப்படுகிறது’’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

ஒவ்வோர் ஆண்டும், ஜூன் மாதம் மேட்டூர் அணை நீர்ப் பாசனத்துக்காகத் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கர்நாடக மாநிலம் செய்யும் சதியாலும், பருவமழை சரியான நேரத்தில் பெய்யாமல் போவதாலும் ஜூன் மாதம் தண்ணீர்த் திறப்பது கைகூடாமல் இருந்துவந்தது. எனவே, டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவைச் சாகுபடியையே மறந்துவிடும் நிலை ஏற்பட்டது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

‘இந்த ஆண்டும் அதே கதைதான் நடக்கப்போகிறதோ...’ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. அணை திறப்பதற்கு இன்னும் 18 நாள்களே இருக்கும் சூழலில், டெல்டா மாவட்டங்களிலுள்ள கால்வாய்கள், வாய்க்கால்களில் மராமத்துப் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. திட்டமிட்டு, முன்கூட்டியே செய்திருக்க வேண்டிய பணி இது. ஆனால், `துட்டு வார வேண்டும்’ என்று திட்டமிட்டே ஒவ்வோர் ஆண்டும் தண்ணீர்த் திறந்துவிடும் நேரத்தில் இது போன்ற குடிமராமத்துப் பணிகள் அறிவிக்கப்படுகின்றன. பொதுப்பணித்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் ‘விவசாயி’ முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வேடிக்கை பார்த்தபடி இருக்கிறார்.

மேட்டூர் அணை திறப்பு என்பது, ‘சரியான தேதியில் தண்ணீர்த் திறந்த எடப்பாடி’ என்று போஸ்டர்கள் அடித்துக் கொண்டாடுவதற்கான விஷயமல்ல; அது பல லட்சம் விவசாயிகளின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் விஷயம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு