Published:Updated:

மதிப்புக்குரிய வாசகர்களே...

சக்தி விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
சக்தி விகடன்

புதிய தொடர், புதிய பகுதிகள் எனப் புதுப் பொலிவுடன் இதோ உங்கள் கைகளில் தவழ்கிறது சக்தி விகடனின் 17-ம் ஆண்டுச் சிறப்பிதழ்.

அன்பான வணக்கம்.

மங்கலம் பொங்கும் ‘தாரண’ தமிழ்ப் புத்தாண்டில் தொடங்கிய உங்கள் சக்தி விகடனின் ஆன்மிகப் பயணம், 17-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து, தொடர்ந்து வெற்றிகரமாகப் பீடு நடை போட்டுக்கொண்டிருப்பதற்கு முழுமுதற் காரணம், இதைச் சரியான திசையில், சரியான விதத்தில் வழிநடத்தும் வாசகர்களாகிய நீங்கள்தான்.

கடிதங்கள், தொலைபேசி, இமெயில், ஃபேஸ்புக் இன்ன பிறவற்றின் மூலம் நீங்கள் எங்களைத் தொடர்புகொண்டு அவ்வப்போது அளித்துவரும் ஆலோசனைகளைப் பரிசீலித்து, எதையெல்லாம் சாத்தியப்படுத்தமுடியுமோ அதையெல்லாம் கட்டுரைகள், பேட்டிகள், துணுக்குகள் எனப் பலவிதங்களில் வழங்கி வருவதால்தான், சக்தி விகடனுக்கு உங்கள் மனத்தில் ஓர் உயர்ந்த இடத்தை அளித்துள்ளீர்கள் என்பதை அறிவோம்.

புதிய தொடர், புதிய பகுதிகள் எனப் புதுப் பொலிவுடன் இதோ உங்கள் கைகளில் தவழ்கிறது சக்தி விகடனின் 17-ம் ஆண்டுச் சிறப்பிதழ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இவற்றில் முதன்மையானது `மாதா அமிர்தானந்தமயி தேவி' அருளும் `ஆறு மனமே ஆறு’ என்னும் புதிய தொடர். சகல பிரச்னைகளையும் தடைகளையும் தைரியமாய் எதிர்கொண்டு வெல்லும் திறமையை நமக்குள் விதைத்து, நம் மனத்தில் மகிழ்ச்சிப் பூக்களை மலரச் செய்யும் மிக அற்புதமான தொடர் இது.

அடுத்து, `எங்கள் ஆன்மிகம்!’. இது முழுக்க முழுக்க உங்களுக்கானது. வாசகர்களாகிய உங்களின் ஆன்மிக அனுபவங்கள், பயணங்கள், ஆன்மிகக் கதைகள், உங்களின் குலதெய்வங்கள், பிடித்த கோயில்கள், பூஜை வழிகாட்டல்கள், சிற்பச் சிறப்புகள்... என நீங்கள் ரசித்த, சிலிர்த்த, சிறப்பிலும் சிறப்பானவற்றை நீங்களே எழுதும் பகுதி இது.

அதேபோல், பெரும்பாலான வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க... வாசகர்களின் ஆன்மிகத் தேவைகளை வாசகர்களே பூர்த்தி செய்ய வாய்ப்பளிக்கும் `உதவலாம் வாருங்கள்’ பகுதி மீண்டும் வெளியாகிறது. மேலும், பாரம்பர்ய கோயில்கள், வி.ஐ.பி ஆன்மிகம், மகான்களின் மகிமைகள், அடியார்களின் சாதனைகள்... என நீங்கள் விரும்பும் சிலிர்ப்பூட்டும் அம்சங்களும் நிரம்பியுள்ளன.

அன்பு வாசகர்களே...! ஒவ்வொரு பகுதியையும் படியுங்கள்; ரசியுங்கள்; நீங்களும் பங்களிப்பு செய்யுங்கள். உங்களின் மேலான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

மிக்க அன்புடன்,

ஆசிரியர்.