Published:Updated:

பீகார் முதல் பைடன் வரை : அரசியல் வியாதிக்குத் தடுப்பூசி ஏது?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

பீகார் முதல் பைடன் வரை : அரசியல் வியாதிக்குத் தடுப்பூசி ஏது?

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
2020-ம் ஆண்டின் கொடுங்கனவாக மாறியிருக்கிறது கொரோனா. பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு ஓரளவுக்கு எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்கு வந்தாலும் இன்னும் கொரோனா குறித்த அச்சம் நீங்கிவிடவில்லை. இறப்பு விகிதம் குறைந்தாலும் கொரோனா மரணங்கள் முற்றிலும் நின்றுவிடவில்லை. ஆனால் இந்தக் கொரோனாவையே தங்கள் அரசியல் ஆயுதமாக அரசியல்வாதிகள் மாற்றியிருப்பதுதான் தரக்குறைவான விஷயம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்' என்று பீகார் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அறிவித்திருப்பவர் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன். அரசியலமைப்பு சட்டப்படி மருத்துவம் என்பது இந்தியக் குடிமக்களின் உரிமை. அனைவருக்குமான சுகாதாரத்தை உறுதிசெய்யவேண்டியது இந்திய அரசின் கடமை. இந்தியா முழுவதும் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டிய, மத்தியில் ஆளும்கட்சி கொரோனாவை ஒரு தேர்தலில் வெற்றிபெறுவதற்கான அரசியல் ஆதாயமாக மாற்றுவது அநீதியானது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில்கூட பொதுமக்கள் பண்டிகைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்கவேண்டிய முறை குறித்து உரையாற்றியிருக்கிறார். பொதுமுடக்கம் முதல் பாதுகாப்பு வழிமுறைகள் வரைக்கும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் பிரதமரின் கட்சி, ஒரு மாநிலத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காகத் `தடுப்பூசி இலவசம்' என்று அறிவிப்பது வேடிக்கையானது; வேதனையானது.

பீகார் முதல் பைடன் வரை : 
அரசியல் வியாதிக்குத் தடுப்பூசி ஏது?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் `தமிழகத்தில் கொரோனாத் தடுப்பூசி இலவசம்' என்று அறிவித்திருக்கிறார். இதில் என்ன அதிசயமிருக்கிறது? காலங்காலமாகவே தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார மையங்களிலும் எல்லாவகையான தடுப்பூசிகளும் இலவசமாகத்தான் போடப்படுகின்றன. அப்படியிருக்க, கொரோனாத் தடுப்பூசியை மையப்படுத்திய முதல்வர் அறிவிப்பும், பீகாரைப்போல, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் வாக்குகளை அறுவடை செய்வதற்கான கணக்குதான்போலும். இன்னும் தடுப்பூசிப் பரிசோதனைகளே முடியாத நிலையில் ஒவ்வொரு கட்சியும் தடுப்பூசியைத் தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்துவது வேடிக்கையானது.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளத்தைச் சுரண்டினார்கள். ஆனால் கொள்ளை நோயால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டபோது அதில் கவனம் செலுத்தி அனைவருக்கும் இலவச மருத்துவம்தான் அளித்தார்கள். ஆனால் நமது ஆட்சியாளர்கள் காலனிய ஆங்கிலேயர்களைவிட மோசமாகப் போய்விட்டார்களா என்ன?

`உலகம் முழுவதும் அரசியல்வாதிகள் ஒரேமாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள்' என்பதற்கு உதாரணம், 'நான் அதிபரானால் கொரோனாத் தடுப்பூசி இலவசம்' என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடனும் அறிவித்திருப்பது. கொரோனாத் தடுப்பூசி என்பது யாரோ ஒருவரைக் காப்பாற்றும் முயற்சியல்ல. கொரோனா பரவாமல் தடுப்பதன் மூலம் ஒட்டுமொத்த உலகமும் காப்பாற்றப்படுகிறது என்பதை உணர்ந்து, பெருந்தொற்றிலும் அரசியல் செய்யும் அறமற்ற செயலை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும்.