Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

பெண் ஏன் எப்போதும் வேலை - வீடு பொறுப்புகளில் பேலன்ஸ்டாக இருக்க வேண்டும்? கொஞ்சம் அன்பேலன்ஸ்டாக அவள் இருக்கட்டுமே.

நமக்குள்ளே...

பெண் ஏன் எப்போதும் வேலை - வீடு பொறுப்புகளில் பேலன்ஸ்டாக இருக்க வேண்டும்? கொஞ்சம் அன்பேலன்ஸ்டாக அவள் இருக்கட்டுமே.

Published:Updated:
நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

ணிபுரியும் பெண்களுக்கு ‘வொர்க் - லைஃப் பேலன்ஸ்’ பற்றிய அறிவுறுத்தல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. உண்மையில், ‘வேலையில் 100%, வீட்டிலும் 100% எனத் திறனாகச் செயல்படுங்கள்...’ என்று பெண்களை 200% உழைக்க விரட்டும் முரண் சமன்பாடு இது.

பெண் ஏன் எப்போதும் வேலை - வீடு பொறுப்புகளில் பேலன்ஸ்டாக இருக்க வேண்டும்? கொஞ்சம் அன்பேலன்ஸ்டாக அவள் இருக்கட்டுமே. பணிச்சூழலில், தன் பணிகளைத் தொய்வின்றி முடித்துதான் ஆக வேண்டும் என்பது சரி. ஆனால், வீட்டில் எந்த உயரதிகாரியிடம் கோப்புகளைச் சமர்ப்பிக்க அவளை இடையறாது உழைக்கச் சொல்கிறார்கள்? இரட்டைச் சுமையில் ஓடிக்கொண்டிருக்கும் பெண்களை, ‘நீ இளைப்பாறு, நான் கலைந்துகிடப்பது ஒன்றும் குற்றமில்லை’ என்று ஆசுவாசப்படுத்தும் நேயமோ, இரக்கமோ நம் வீடுகளில் இருப்பதில்லை. மாறாக, சோர்வுடன் கூடு திரும்புபவளை, கணவர் முதல் குழந்தைகள்வரை தங்கள் தேவைகளுக்கான அடுத்த சுற்றில் ஓட வைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, ஒரு பகுதி உழைப்புக்காவது ஊதியம் கிடைக்கிறது. இல்லத்தரசிகளின் நிலை பரிதாபம். நாள் முழுக்கச் சுழன்றுகொண்டே இருக்கும் சம்பளமில்லாத வேலையாட்கள் அவர்கள். ஒதுங்க வைக்கப்படாத ஹால், மடிக்கப்படாத துணிகள், வேலை மிச்சமிருக்கும் கிச்சன், தூசிதட்டப்படாத ஜன்னல் என இவையெல்லாம் நமக்குக் குற்ற உணர்வை தந்துகொண்டே இருக்கின்றன. ஒரு கப் டீக்கு முன் இவற்றையெல்லாம் முடித்துவிட்டு அமர்ந்தால்தான் ‘சிறப்பான குடும்பத்தலைவி’ என்ற அடிமைத்தனம் ஒளிந்துள்ள பட்டத்துக்காக நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். கற்களால் ஆன கட்டடத்தை பேணிப்பாதுகாக்க, நம் மூட்டுகளைத் தேய்த்துக்கொண்டே இருக்கிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம் மனமாற்றம்தான், இந்த உழைப்புறிஞ்சலுக்கு எதிரான முதல் படி தோழிகளே. வீட்டுவேலை பார்க்க வேண்டாம் என்பதல்ல. அதிலேயே கரைந்துபோகாமல் உங்களுக்குத் தேவையான நேரத்தை எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள். படுக்கை மடிப்பது முதல் வார்ட்ரோப் க்ளீனிங் வரை வீட்டில் மற்றவர்களுக்கும் வேலைகளைப் பிரித்துக்கொடுங்கள். வீட்டு வேலை பெண்களுக்கு நல்ல உடற்பயிற்சி என்று உங்களை நீங்களே சமாதானம் சொல்லிக்கொள்ளாதீர்கள்.

வாய்ப்பிருப்பவர்கள் வேலையாள் போன்ற சப்போர்ட்டிங் சிஸ்டத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டுக்கு வருபவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற மனத்தடைகளிலிருந்து வெளியேறுங்கள். ஆசுவாசமாக அரை மணி நேரம் அமர்ந்துவிட்டால்கூட, உடனே மிச்ச வேலைகள் மூளைக்குள் குதியாட்டம் போட்டு விரட்டும் மனப்பதற்றத்திலிருந்து விடுபடுங்கள்.

ஓய்வு, நிம்மதி, பிடித்ததைச் செய்யும் ‘மீ டைம்’, எதையுமே செய்யாமல் ஜன்னலில் வேடிக்கை பார்க்கும் ‘சும்மா கொஞ்ச நேரம்...’ இவையெல்லாம் தவறில்லை தோழிகளே. உண்மையில் இவை நம் உடல், மன நலனுக்கான மூலக்கூறுகள்.

ரிலாக்ஸ்!

நமக்குள்ளே...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism