பண்டிகைக் காலம் பிறந்துவிட்டது. அடுத்து வரும் ஒரு சில மாதங்களுக்குப் புதிய கார் மற்றும் பைக்ஸ் அறிமுகங்களுக்குக் குறைவு இருக்காது. இந்தக் கொண்டாட்டத்தின் ஆரம்பத்தை கியா துவக்கி வைத்துள்ளது.

செல்ட்டோஸ், கார்னிவெல் என முதல் இரண்டு வாகனங்களுமே கியாவுக்குக் கை கொடுக்க... இந்திய கார் மார்க்கெட்டில் அது தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது. கியா நம் நாட்டில் இதுவரை விற்பனை செய்திருக்கும் கார்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். யுட்டிலிட்டி வாகன விற்பனைப் பிரிவில் இப்போது 9 சதவிகிதம் கியாவின் வசம்! இந்த வெற்றிக் களிப்பில் கியா மூன்றாவதாக சோனெட் என்கிற காம்பேக்ட் எஸ்யூவியைக் களமிறக்கி உள்ளது. இந்தக் கொரோனா காலத்திலும், சோனெட்டின் புக்கிங் தொடங்கிய முதல் இரு நாளிலேயே 6,500-க்கும் அதிகமான கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. செல்ட்டோஸ் போலவே பலவிதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், Tech Line & GT Line என இரு ஸ்டைல்களில் அறிமுகமாகி இருக்கும் இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் அப்படி என்ன இருக்கிறது? வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சங்கள் எல்லாம் இதில் இருக்கின்றனவா? இந்தக் கேள்விக்கான விடை அடுத்து வரும் பக்கங்களில் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சியின் நீலகிரி, கூர்க், சிக்மகளூரு போன்ற மலைப்பாங்கான நிலப்பரப்புகளானாலும் சரி... டார்ஜிலிங், சிக்கிம், மணாலி போன்ற உயரமான மலைப் பகுதிகளானாலும் சரி... மனிதர்களுக்கு உற்ற துணையாக விளங்கும் வாகனம், மஹிந்திராவின் ஜீப் CJ-3. இந்த வாகனத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஞாபகங்கள் நிழலாடும். வெறுமனே வாகனமாக மட்டும் கருதாமல், அதை வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும், லைஃப் ஸ்டைல் தொடர்பு கொண்டதாகவும் பலர் கருதுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக விளங்கும் மஹிந்திராவின் தார், சுதந்திரத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுவதாலோ என்னவோ, புதிய மஹிந்திரா தார் சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதுவரை விற்பனையில் இருந்த தாருக்கும் புதிய தாருக்கும் ஒற்றுமைகளே இல்லையோ என்று கருதும் அளவுக்கு வெளித்தோற்றம், உள்ளலங்காரம், இன்ஜின் என்று அனைத்தையும் மாற்றியிருக்கிறது மஹிந்திரா. ஒரு சிலர் இது அமெரிக்காவின் ரேங்ளர் மாதிரி தெரிவதாகக்கூடச் சொல்லி சிலாகிக்கிறார்கள். இந்தப் புகழ்மொழிகளுக்கு எல்லாம் பொருத்தமானதுதானா மஹிந்திரா தார்? இந்த இதழ் உங்களுக்கு விடை சொல்லும்.

கார்களைப்போலவே பைக் செக்மென்ட்டிலும் பேசுபொருட்களுக்குப் பஞ்சமில்லை. அதில் முக்கியமானது ஸ்வீடன் நாட்டின் வரவான ஹூஸ்க்வானா. அறிமுகமாகியிருக்கும் விட்பிலின் (Vitpilen), ஸ்வேட்பிலின் (Svartpilen) என்ற இரண்டு 250சிசி பைக்குகளுமே பைக் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றன. இந்த இரண்டும் ஓட்டுவதற்கு எப்படி இருக்கின்றன? இந்தக் கேள்விக்கான விடையும் இந்த இதழில்!

அன்புடன்

ஆசிரியர்