Published:Updated:

ஊழலோ ஊழல்!

பசுமை வணக்கம்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை வணக்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

ஊழலோ ஊழல்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

Published:Updated:
பசுமை வணக்கம்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை வணக்கம்
‘பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் (பிரதான் மந்திரி கிசான் சம்மான்) ஊழல் எனக் கடந்த இதழில் விரிவான கட்டுரை எழுதப்பட்டிருந்தது. தற்போது, இந்த விஷயம் பெரிதாக வெடித்திருக்கும் நிலையில், ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய ஆரம்பித்துள்ளது.

‘விழுப்புரத்தில் 4 கோடி...

திருவண்ணாமலையில் 3 கோடி...

கள்ளக்குறிச்சியில் 4 கோடி...’

‘அடுத்தடுத்து அதிர்ச்சி... விவசாயிகள் பணத்தில் ஊழலோ ஊழல்’ என்று ஏக பரபரப்புக் கிளம்பியுள்ளது.

உண்மையில், இதில் அதிர்ச்சிக்கு ஏதும் வேலையே இல்லை. சொல்லப்போனால், விவசாயிகளின் பெயரால் நடத்தப்படும் ஊழல்களில் இது முள்முனையளவுகூட கிடையாது.

‘வேளாண்மைத் துறை’ என்றைக்குத் தொடங்கப்பட்டதோ... அன்றைய நாள் முதலே ஊழலுக்கும் விதை விதைக்கப்பட்டுவிட்டது. பூச்சிக்கொல்லி ஊழல், உர ஊழல், விதை ஊழல், நாற்று ஊழல், சொட்டுநீர்ப் பாசன ஊழல், அறுவடை இயந்திர ஊழல், புயல் நிவாரண ஊழல், வெள்ள நிவாரண ஊழல், வறட்சி நிவாரண ஊழல், இப்படி விவசாயத்தின் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஊழலோ ஊழல்தான். ஊழல் அதிகம் நடைபெறும் துறைகளைப் பட்டியலிட்டால், முதலிடம் வேளாண் துறைக்குத்தான். ஆண்டுதோறும் விவசாயத்துக்காக ஒதுக்கப்படும் பணத்தில் முழுமையாக விவசாயிகளின் கைகளுக்கு 20, 30 சதவிகிதப் பணம் போய்ச் சேர்ந்திருந்தாலே பெரிய விஷயம்!

இப்படி ஓங்கி வளர்ந்து நிற்கும் ஊழல் எனும் களைகளை ஒழிக்காதவரையில், ‘வேளாண் திட்டங்கள்’ என்கிற பெயரில் அள்ளிவிடப்படுவது... விழலுக்கு இறைத்த நீராகவேதான் இருக்கும். “விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்தியே தீருவேன்” என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் வீரமுழக்கமும் வெற்று முழக்கமாகவேதான் இருக்கும்!

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism