Published:Updated:

விகடன்ல விசேஷம்... உங்க ஆதரவு அவசியம்!

விகடன் வணக்கம்
விகடன் வணக்கம்

Best Of Vikatan பற்றிய ஷேரிங்ஸ்!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்...
நான் கி.கார்த்திகேயன். `கி.கா’னு கூப்பிடுவாங்க. எப்பவும் விகடன் வாசகன். இப்போ விகடனின் Digital Editor In Chief. இனி ஒவ்வொரு வாரமும் உங்களோட கொஞ்சம் கதை பேசலாம்னு இருக்கேன். விகடன்ல என்னலாம் நடக்குதுனு உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கவும், நீங்க எங்ககிட்ட என்ன எதிர்பார்க்கிறீங்கனு தெரிஞ்சுக்கவும் விகடன் எடிட்டோரியல் டீமுக்கு ஆசை. அதான்..!

ஓ.கே... நேரா விஷயத்துக்கு வருவோம்... போன வாரம் அவள் விகடன் கிச்சன் இதழின் yummy awards மனசுக்கு நிறைவா சென்னைல நடந்துச்சு. தொன்னை பிரியாணி கடைல இருந்து சாய் கிங்ஸ் வரைக்கும் தமிழ்நாடு முழுக்க தேர்ந்தெடுத்து 13 பேருக்கு விருது கொடுத்தோம். மினியேச்சர் கிச்சன், செல்ல நாய்க்குட்டிகளை அழைச்சுட்டு போய் சாப்பிட அனுமதிக்கிற தீம் ரெஸ்டாரன்ட்னு கலவையா இருந்த வெற்றியாளர்களைப் பார்த்த விருந்தினர்களுக்கு பரவசமும் நெகிழ்வுமான அனுபவம். வெற்றியாளர்கள் ப்ளஸ் விருந்தினர்கள்னு வந்து குவிந்த பிரபலங்களை இந்த ஸ்லைட் ஷோல பாருங்க.

கோபிநாத், சதீஷ், ஈரோடு மகேஷ், ரியோ கலந்துகிட்ட ஜாலி கலாய் ஷோ, அர்ச்சனாவின் கலகல காம்பியரிங்னு ரசனையான இந்த விழாவை அக்டோபர் 5-ம் தேதி சாயங்காலம் 5 மணிக்கு ஜீ தமிழ் சேனல்ல பார்க்கலாம். விகடன் வீட்டு விசேஷம்... மிஸ் பண்ணாம பாருங்க..!

அப்புறம்... விகடன் ரிப்போர்ட்டர் ஜார்ஜ் கும்கி யானைகள் உருவாகும் கதைனு செம டாகுமென்ட்டரி எடுத்துருக்கார்.
ஜார்ஜ்
ஜார்ஜ்

மேற்குத் தொடர்ச்சி மலையின் இண்டு இடுக்குகளில் புகுந்து சிறுத்தை, கரடி, மான்களுக்கு இடையில் யானைகளின் வாழ்க்கையை அழகா, அட்டகாசமா கொண்டு வந்திருக்காங்க. ஒளிப்பதிவும் சரி, தகவல்களும் சரி... அல்ட்டி! டிரைலரை இப்போ பாருங்க... மெயின் பிக்சர் சீக்கிரமே வரும்..!

அப்புறம்.... நம்ம ரிப்போர்ட்டர் சுதர்சன் காந்தி, ஆந்திராவுக்குப் போய் சிரஞ்சீவியை பேட்டி எடுத்திருக்கார். விகடன் டி.வி-ல இன்பாக்ஸ் ஷோ பண்றவர்தான் சுதர்சன்.
சுதர்சன் காந்தி
சுதர்சன் காந்தி

பல மாசமா ஃபாலோ பண்ணி சிரஞ்சீவி அப்பாயின்மென்ட் வாங்கினார். ரெண்டு மணி நேரம் எடுத்த பேட்டில என்னலாம் நடந்துச்சுனு சுதர்சன் சொல்லியிருக்கார். அஜித் பத்தி விசாரிச்சுட்டு பிரியாணி விருந்து கொடுத்து அனுப்பியிருக்கார் சிரஞ்சீவி. பேட்டி எடுத்த கதையே அவ்ளோ சுவாரஸ்யமா இருக்கு.

சிரஞ்சீவியைப் பேட்டி எடுத்த விகடன் நிருபரிடம், அவர் கேட்ட அந்தக் கேள்வி! #ChiranjeeviInVikatan
ஆனந்த விகடன்ல வெளியான அந்தப் பேட்டில ரஜினி, கமலுக்கு நச்னு ஒரு அரசியல் அட்வைஸ் கொடுத்திருக்கார் சிரஞ்சீவி.
“கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்!

சிரஞ்சீவி பேட்டி முடிச்சுட்டு ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி போன நம்ம பசங்க, பாகுபலி செட்டை ஷுட் பண்ணியிருக்காங்க. கிட்டத்தட்ட ரியல் லைஃப் எபெஃக்ட்ல இருக்கிற அந்த செட்... இப்பவும் ஆச்சர்யம்தான்!

விகடன் நியூஸ் ரூம்ல பல விஷயங்களைப் பத்தி டெட்லைன் பிரஷர்ல ஸ்டோரிஸ் பண்ணிட்டு இருப்போம். சமீப வருடங்கள் சினிமா, அரசியல், சமூக நிகழ்வுகளுக்குச் சமமா, சமயங்கள்ல அதையும்விட அதிகமா பொருளாதாரம் சார்ந்த செய்திகளுக்கு எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கும். டிமானிடைஷேசன், ஜி.எஸ்.டி, தங்கம்/எரிபொருள் விலை, பட்ஜெட், ரிசஷன், சென்செக்ஸ்... இப்படி தினம் அதகளமும் ரணகளமுமா இருக்கு. ஷேர் மார்க்கெட்ல இருந்து நம்ம ஏரியா சூப்பர் மார்க்கெட் வரை நல்லதோ, கெட்டதோனு ஏதோ ஒரு பாதிப்பு இருந்துட்டே இருக்கு. ஷேர் மார்க்கெட்ல முதலீடு பண்றோமோ இல்லையோ, அங்க என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கிட்டா, அடுத்த சில மாதங்கள்ல அது நம்மளை எப்படிப் பாதிக்கும்னு ஒரு ஐடியா கிடைக்கும்.

இதைப் பத்தியெல்லாம் எளிமையா அதே சமயம் ஆழமாகவும் ஒரு தொடர் பண்ணலாம்னு நாணயம் விகடனின் நிர்வாக ஆசிரியர் ஏ.ஆர்.குமார் சாரிடம் பேசிட்டு இருந்தப்ப, பொருளாதார உள்விவகாரங்களை விரல் நுனில வைச்சுருக்கிற சோம.வள்ளியப்பன் சாரை விகடன்.காம்ல ஒரு தொடர் எழுத வைக்கலாம்னு! செம ஐடியா சொன்னார். வள்ளியப்பன் சார்கிட்ட பேசினோம். ’சாமான்யர்களுக்குப் புரியனும்... மார்க்கெட் எக்ஸ்பர்ட்களுக்கும் அதுல ஏதாச்சும் செய்தி இருக்கணும்... இது மட்டும்தான் சார் கண்டிஷன்’னு சொன்னோம். `ரொம்ப கஷ்டமான சவாலாச்சே!’னு சொன்னாலும் சிரிச்சுட்டே ஏத்துக்கிட்டார்.

100 நாள்ல உங்களை ஸ்மார்ட் இன்வெஸ்டர் ஆக்கிடுறேன்னு வள்ளியப்பன் சார் சவால் விட்டிருக்கார். இந்த ஸ்மார்ட் சேலஞ்சை நீங்க ஏத்துக்குறீங்களா?
தங்கம் முதலீடு எப்படிப் பண்ணா நல்லது, நிர்மலா சீதாராமனின் சலுகை அறிவிப்பால் என்ன நடக்கும்..?! Be Smart..!
#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days
நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா?#SmartInvestorIn100Days
- நாள் 1

ஆனந்த விகடன்ல கார்ட்டூனிஸ்ட் ஹாசிப் கான் வரையிற கலாட்டூன் எப்படி உருவாகுது? The Making Of Galaatoon-ஐ ஒரு சின்ன வீடியோவா எடுத்துருக்காங்க நம்ம பசங்க... 2 நிமிஷ வீடியோதான்... கொஞ்சம் என்னனு பாருங்களேன்!

24*7 நியூஸ் சுனாமில சிக்கித் தவிச்சுட்டு இருக்கோம் நாம. இதுல ஏகப்பட்ட தகவல்கள், செய்திகள், வதந்திகள்னு குவியுது. ஆனா, எதுவும் ஆழமா, அழுத்தமா இல்லை.

சமயங்கள்ல தேவைப்படுற தகவல்கள் இல்லாம போகுது. எக்ஸ்பிரஸ் வேகத்துல போனாலும், ஒரு விஷயத்தைப் பத்தி A-Z தகவல்கள் இருக்கிற மாதிரி Long Form Story ஒண்ணு முயற்சி பண்ணிருக்கோம். பரிசோதனை முயற்சிக்கு உப்பை கைல எடுத்துட்டோம். ஆமாங்க... இந்துப்பு பத்தி அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்கள்/தகவலோட இந்த ஸ்டோரி இருக்கும்.

இந்துப்பு
இந்துப்பு
'இந்துப்பு' நல்லதா... கெட்டதா..? சந்தேகங்கள், விளக்கங்கள்... A to Z தகவல்கள்! #IsRockSaltHealthy

இந்த மாதிரி வேற எந்த சப்ஜெக்ட்ல Long Form Story பண்ணலாம்னு உங்க ஐடியாக்களைக் கொடுங்களேன்... ரொம்ப சுவாரஸ்யமா இருக்கிறதை விகடன் டீம் எடுத்துக்குவோம்!

அப்புறம்... ஒரு குட்டி சர்வே... விகடன்.காம்ல என்ன பிடிக்குது... என்ன பிடிக்கலை... ஒரு நிமிஷம் செலவழிச்சு கருத்து சொல்லுங்களேன். அது எங்களுக்குப் பெரிய உதவியா இருக்கும்!

அடுத்த லெட்டர்ல ரெண்டு ஆச்சர்யங்களோட சந்திக்கலாம்..!

அதுவரைக்கும்....Take Care.

உங்கள்,
கி.கா.
P.S: விகடன் APP லேட்டஸ்ட் build டிரை பண்ணிப் பாருங்க.... உங்க கமெண்ட்ஸ், ரேட்டிங்கை கொடுங்க...!
பின் செல்ல