Published:Updated:

உற்சாகம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

உற்சாகம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

பசுமை விகடன் இதழ் 16-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் பசுமை பயணத்தில் பங்கு கொண்டுள்ள அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது. கடந்த 15 ஆண்டுகளில் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறோம். இயற்கை வேளாண்மையை, மாணவர்களிடம் ஊக்குவிக்க, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவில் இயற்கை விவசாயி ஒருவரைச் சேர்த்துப் பெருமை சேர்த்துள்ளார்கள். கூடவே, பசுமை விகடன் இதழில் வெளிவந்த இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வல்லுநர்குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மாற்றம் ஒரு நாளில் உருவானது அல்ல.

‘இயற்கை விவசாயம் என்பது அறிவியல் ஆதாரம் இல்லாதது...’ எனப் பல்கலைக்கழகங்கள் மூலம் புறந்தள்ளப்பட்ட நிகழ்வுகள்தான் முன்பு நிறையவே நடைபெற்றன. ஆனால், இன்று இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம் பரிவட்டம் கட்டி, பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழுவில் சேர்க்கும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா... போன்றவை பற்றிப் போட்டி போட்டுக்கொண்டு, ஆராய்ச்சி செய்கின்றன பல்கலைக்கழகங்கள். இயற்கை வேளாண்மைக்குத் திரும்பும் விவசாயிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கான்கிரீட் காடுகள் என்று அழைக்கப்படும், நகரம்தோறும் வீட்டுத்தோட்டங்கள் உருவாகி வருகின்றன. சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு வேகமாகப் பரவி வருகிறது.

இதற்குக் கட்டியம் கூறும் விதமாக, இந்த இதழில் ‘படிச்சோம், விதைச்சோம்’ என்ற தலைப்பில் பசுமை விகடன் மூலம் பலன் பெற்ற வெற்றி விவசாயிகளின் அனுபவங்கள் இடம் பெற்றுள்ளன. இவை எங்களுக்கு உற்சாகத்தையும் பொறுப்புணர்வையும் கூடுதலாக்கியுள்ளன. என்றென்றும் இணைந்தே இருப்போம், ஓர் இயக்கமாக!

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism