Published:Updated:

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 5 - வொர்க்-லைஃப் பேலன்ஸ் சவால் அல்ல, சமாளிக்கலாம்!

வொர்க்-லைஃப் பேலன்ஸ் சவால் அல்ல, சமாளிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
வொர்க்-லைஃப் பேலன்ஸ் சவால் அல்ல, சமாளிக்கலாம்!

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 5 - வொர்க்-லைஃப் பேலன்ஸ் சவால் அல்ல, சமாளிக்கலாம்!

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

Published:Updated:
வொர்க்-லைஃப் பேலன்ஸ் சவால் அல்ல, சமாளிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
வொர்க்-லைஃப் பேலன்ஸ் சவால் அல்ல, சமாளிக்கலாம்!

கல்லூரிப் படிப்பை முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி கரியரை தொடங்கியவர் இளவரசி. திருமணம், குடும்பம், குழந்தை கமிட்மென்ட்டுகளால், வேலையைத் துறந்து வீட்டில் முடங்கினார். ``இளவரசிக்கு மட்டுமல்ல, வொர்க் லைஃப் பேலன்ஸ் என்பது பெரும்பாலான பெண் களுக்கும் மிகப்பெரிய சவால். கரியரையும், பர்சனல் வாழ்க்கையையும் பேலன்ஸ் செய்ய வேண்டியவர்கள் பெண்களே என்ற எண்ணத்தை உடைத்து, அதில் குடும் பத்தாருக்கும் பங்கிருப்பதை புரியவைக்க வேண்டியது அவசியமாகிறது. சிறந்த குடும்பத் தலைவியாக மட்டுமன்றி சிறந்த நிர்வாகியாகவும் உங்களை உயர்த்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அடிப்படை'' என்கிறார் ஐ.டி.சி லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டாளர் விஜயலட்சுமி. அதற்கான வழிகளையும் காட்டுகிறார்...

விஜயலட்சுமி
விஜயலட்சுமி

செய்ய வேண்டியவை:

* வேலை என்பது பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமல்ல, அது உங்கள் இலக்கு மற்றும் ஆர்வம் சம்பந்தப்பட்டது என்பதை குடும்பத்தாருக்குப் புரியவையுங்கள்.

* வீடு மற்றும் அலுவலகப் பொறுப்புகள் அழுத்தம் தரும்போதெல்லாம், நீங்கள் எதற்காக வேலைக்குச் செல்ல ஆரம்பித் தீர்கள், உங்களின் இலக்கு என்ன என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்.

* வேலை போய்விடுமோ என்ற பயம் மன அழுத்தத்தைத் தரும். பணி நிரந்தரம் பற்றி கவலைப்படாமல் உங்கள் திறமைக்கு எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும் என உறுதியாக நம்புங்கள்.

* விடுமுறை நாளில் அல்லது அலுவலக நேரத்துக்குப் பின்பும்கூட வேலை பார்க்கும் சூழல் ஏற்படலாம். அலுவலகத் தில் உங்கள் பணிக்கு அவ்வளவு டிமாண்ட் என்பதை குடும்பத்தாருக்குத் தெரியப் படுத்துங்கள்.

* அலுவலக பிரச்னைகளை அலுவலகத்தி லேயே விட்டுச்செல்லுங்கள். வீட்டுக்குச் சென்ற பின் உங்கள் நேரத்தை குடும்பத் துக்காக மட்டும் முழுமனதுடன் செல விடுங்கள்.

* வேலையில் ஸ்ட்ரெஸ் அதிகமானால், உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை முடித்துவிட்டு, சில மாதங்கள் பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள். விருப்பப்பட்டால் புதிய கோர்ஸ் ஏதேனும் படித்து மீண்டும் ஒரு புது நிறுவனத்தில் கரியரைத் தொடங்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 5 - வொர்க்-லைஃப் பேலன்ஸ் சவால் அல்ல, சமாளிக்கலாம்!

* நீங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளைச் செய்யவும் டே - கேர், ஹவுஸ் கீப்பங் போன்ற மாற்று வழி களை ஏற்பாடு செய்யுங்கள். பயமும், ஸ்ட்ரெஸ்ஸும் இல்லாதபோது வேலை யின் மீதும், குடும்பத்தின் மீதும் சலிப்பும், கோபமும் வராது.

* குடும்பம், அலுவலகம் என சுழன்றாலும், உங்கள் மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதை மிஸ் பண்ணாதீர்கள்.

* அலுவலகத்தில் நல்ல பெயர் வாங்குகிறேன் என்ற பெயரிலோ, அல்லது விடுப்பை ஒப்படைத்து, பணம் வாங்கும் எண்ணத்திலோ உங்கள் விடுமுறைகளைத் தியாகம் செய்யவேண்டாம். இது உங்களின் வாழ்க்கையை இயந்திரத் தனமாக மாற்றிவிடும்.

* வருடத்துக்கு ஒருமுறை குடும்பத்துடன் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டு, புத்துணர்வு பெறுங்கள்.

* மூன்று மாதங்களுக்கொரு முறை ஹீமோகு ளோபின் அளவு, ரத்தச்சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதிப் பதைக் கட்டாயமாக்குங்கள்.

செய்யக்கூடாதவை:

* எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளத் தவறாதீர்கள். காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

* உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்கா தீர்கள்.

* ‘நல்ல மனைவி இல்லை’. ‘நல்ல அம்மா இல்லை’ என்பது போன்ற விமர்சனங்களை மனதில் ஏற்றிக்கொள்ளாதீர்கள்.

* வீடு, வேலை என சுழல்வதால் இரண்டிலும் உங்களால் 100 சதவிகித உழைப்பைக் கொடுக்க முடியாது. அதற்காக குற்ற உணர்வுகொள்ளத் தேவையில்லை.

ஆல் தி பெஸ்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism