Published:Updated:

`கஜானாவில் 800 கோடிக்கு வேட்டு' முதல் `ட்ரோன் படை' வரை... புதன் முதல் கடைகளில் ஜூ.வி!

ஜூனியர் விகடன்
ஜூனியர் விகடன்

`ஐ.ஏ.எஸ்-கள் கூட்டு... தமிழக கஜானாவில் 800 கோடிக்கு வேட்டு’ முதல் `கொரோனா யுத்தம் - களமிறங்கும் ட்ரோன் படை’ வரை... நாளை (புதன்கிழமை) முதல் கடைகளில் ஜூ.வி!

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான ஊரடங்கு முன்னெடுப்புகளால் கடந்த மூன்று வாரங்களாக ஜூனியர் விகடன் அச்சு இதழைக் கொண்டு வர முடியவில்லை. ஆனாலும், விகடன் இணையதளத்திலும் விகடன் செயலியிலும் ஜூனியர் விகடன் இதழ்களைப் பதிவேற்றியிருந்தோம். அதற்கு சிறப்பான வரவேற்பும் கிடைத்தது.

ஊரடங்கு இன்னும் தளர்த்தப்படவில்லைதான். ஆனாலும், அடிப்படையான அத்தியாவசியத்துறைகளில் முக்கியமானது பத்திரிகை துறை. அதற்கேற்ப ஏராளமான வாசகர்கள் அச்சு இதழ் எப்போது வரும் என்று ஆவலுடன் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, இந்த இக்கட்டான சூழலிலும் சிறு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் அச்சு இதழாகக் கொண்டுவருகிறோம். நாளை (புதன்கிழமை) ஜூனியர் விகடன் இதழ் வழக்கம்போல் கடைகளில் கிடைக்கும்.

இதோ இதழின் ஹைலைட்ஸ்...

* “போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம். `ஜூனியர் விகடன்’ இதழுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி இது!

தூய்மைப் பணியாளர் பாதபூஜை
தூய்மைப் பணியாளர் பாதபூஜை

* கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்யும் இதே தமிழகத்தில்தான், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் மனிதநேயமற்ற செயல்களும் நடக்கின்றன. அம்பத்தூர் மின் மயானம் தொடங்கி கீழ்ப்பாக்கம் மயானம் வரை நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியளித்தன. இப்படியான சூழலில் `கொரோனாவால் இறந்தவர்களின் உடலிருந்து நோய் பரவாது’ என்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மின்மயானத்தில் நடத்தப்பட்ட `டெமோ’ இந்த இதழில் லைவ்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

* திருப்பூர் பனியன் கம்பெனிகளில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். வேலையிழப்பு, அலைக்கழிப்பு என ஏற்கெனவே சிக்கலில் இருந்த திருப்பூர் தொழிலாளர்களின் வாழ்க்கை, இந்த ஊரடங்கால் மேலும் சூன்யமாகியிருக்கிறது. முழுமையான கள நிலவரத்தை `ஊரடங்கு... திருப்பூரில் தெரிகிறது தேசத்தின் நிலை!’ எனும் சிறப்புச் செய்திக் கட்டுரையாக மனக்கண்ணில் காட்சிப்படுத்துகிறது.

ட்ரோன்
ட்ரோன்

* கொரோனா துயரத்திலிருந்து இந்த உலகைக் காப்பாற்ற வானத்திலிருந்து ஒரு தேவதூதன் இறங்கி வரமாட்டானா என்பதுதான் பல நூறு கோடி மக்களின் பிரார்த்தனையாக உள்ளது. வானத்திலிருந்து வரும் தேவதூதன் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பானோ இல்லையோ, வானத்தில் பறக்கும் நவீன ட்ரோன்களைக்கொண்டு வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சி தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது தமிழ்நாடு. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பாசிட்டிவ் பக்கங்களைக் காட்டும் `பைலட் தமிழ்நாடு: கொரோனா யுத்தம் - களமிறங்கும் ட்ரோன் படை!’ கட்டுரை நீங்கள் தவறவிடக் கூடாத ஒன்று!

கழுகார் பதில்கள், ஜெயில்... மதில்... திகில், நீட் வைரஸ், மிஸ்டர் மியாவ் போன்ற வழக்கமான பக்கங்களுடன் நடப்பு அரசியல் விவகாரங்கள் மட்டுமன்றி, தமிழகத்தின் கொரோனா விளைவு தொடர்பான வெளிவராத பல தகவல்களைத் தாங்கி வருகிறது ஜூனியர் விகடன் இதழ். அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக நாளை (புதன்கிழமை) கடைக்கு வரும்போது மறக்காமல் ஜூ.வி-யையும் கேட்டு வாங்குங்கள். ஊரடங்கு அமலில் இருக்கும் மே 3 வரை வீட்டிலேயே தனித்திருங்கள்... விகடனோடு இணைந்திருங்கள்!
அடுத்த கட்டுரைக்கு