Published:Updated:

ரேபிட் கிட் மர்மங்கள்... பரிசோதனை கருவி முறைகேடுகள்... பின்னணியும் அதிரடியும்! தவறவிடாதீர்கள்... சனிக்கிழமை கடைகளில் ஜூ.வி!

Test
Test

கொரோனா போரில் நம்பிக்கையளிக்கும் தொழில்நுட்பங்கள் முதல் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகளை முன்வைத்து நடந்த முறைகேடுகள் வரை... நாளை (சனிக்கிழமை) முதல் கடைகளில் ஜூ.வி!

கொரோனா ஊரடங்கு தாக்கத்தின் காரணத்தால் கடந்த சில வாரங்களாக மின்னிதழாக வந்துகொண்டிருந்த ஜூனியர் விகடன், புதுப்பொலிவுடன் புதன்கிழமை முதல் மீண்டும் அச்சில் வந்திருக்கிறது. வாசகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பினால், கடைகளுக்கு விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே, முழுவதுமாக விற்று தீர்ந்துவிட்டன. இந்த மிகப்பெரிய விற்பனை மேலும் உற்சாகம் கூட்டியுள்ளது. அந்த உற்சாகம் தந்த உத்வேகத்துடன் அடுத்த இதழும் நாளை (சனிக்கிழமை) கடைகளுக்கு வருகிறது.

இதோ இதழின் ஹைலைட்ஸ்...

* சீனாவிலிருந்து ரேபிட் பரிசோதனைக் கருவிகள் வந்தவுடனே, ‘சில தினங்களில் அத்தனை கொரோனா நோயாளிகளையும் கண்டுபிடித்து சிகிச்சை தந்துவிடலாம்’ என்று நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், நடப்பவை அனைத்தும் தலைகீழாக இருக்கின்றன. ஏகப்பட்ட குழப்பங்கள், குளறுபடிகள். இவற்றிற்கு என்ன காரணம், 'நோயாளிக்கு நெகட்டிவ் ஆரோக்கியமானவருக்கு பாசிட்டிவ்... குழப்பும் ரேபிட், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்...' எனும் சிறப்பு கட்டுரை விரிவாக அலசுகிறது.

Corona test
Corona test

* 'ரேபிட் டெஸ்ட் மர்மங்கள்... மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?' கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காகச் செய்யப்படும் பரிசோதனைகள் எந்த அளவுக்கு நம்பகமானவை? மருத்துவ வல்லுநர்கள் விளக்கும் கட்டுரை இது.

* 'ரேபிட் டெஸ்ட் கருவிகள்... அனுமதியில்லாத நிறுவனம்... உச்ச புள்ளிக்கு தொடர்பு?' ரேபிட் டெஸ்ட் முடிவுகளில் குழப்பங்களுக்கிடையே நடந்த முறைக்கேடுகளையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது.

Corona Discover Tech
Corona Discover Tech

* கொரோனாவைத் தடுக்கும் குறிப்பிட்ட மருந்து மட்டும்தான் தற்போது இல்லை. ஆனால், வைரஸ் எப்படிப் பரவுகிறது, நம் உடலில் எந்தப் பாதையில் பயணிக்கிறது, நம்மை நாம் எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என அனைத்துவிதமான தகவல்களையும் தொழில்நுட்பங்கள் மூலம் நம்மால் கண்டறிய முடிந்திருக்கிறது. கொரோனா யுத்ததில் நமக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் தரும் தொழில்நுட்பங்கள் பற்றி விளக்குகிறது 'கொரோனா போர் நம்பிக்கையளிக்கும் தொழில்நுட்பங்கள்!' என்ற தலைப்பிலான கட்டுரை.

"வாடகை வீட்டில் குடியிருப்பவர்களிடம் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை தரச்சொல்லி கட்டாயப்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு அறிவித்ததும், தமிழ்நாடு முழுவதும் வாடகை தராதவர்களை காலி செய்யச்சொல்லி குவியும் புகார்கள் மூலம் எளிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கவனப்படுத்துகிறது 'ஒரு மாத வாட ‘கை’... கொடுக்கலாமா, வாங்கலாமா?' எனும் கட்டுரை.

ESI Hospital
ESI Hospital

* கொரோனா காலத்தில் மாநில அரசு மருத்துவமனைகள் சேவைகள் மகத்தானவை. ஆனால், சேலத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் மருத்துவ வசதிக்காக உருவாக்கப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உயிர் காக்கும் உபகரணங்கள் இல்லை என்று அதன் பயனீட்டாளர்களின் குமுறல்களின் வெளிப்பாட்டை 'செயல்படாத லிஃப்ட்... ஓட்டுநர் இல்லாத ஆம்புலன்ஸ்... சேலம் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் அவலம்' என்ற கட்டுரை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

* இந்த இதழ் 'மிஸ்டர் கழுகு' பகுதியில்

‘‘ஊரடங்கு தமிழகத்தில் நீடிக்குமோ?’...மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டது என்ன ... சசிகலாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுக்கிறா எடப்பாடி... கொரோனா ஊரடங்கில் பத்திரப்பதிவு அலுவலகத்தை அவசரமாக திறந்ததன் பின்னணி என கழுகார் தரும் எக்ஸ்குளூசிவ் தகவல்கள்!

Sasikala
Sasikala

கழுகார் பதில்கள், ஜெயில்... மதில்... திகில், நீட் வைரஸ், மிஸ்டர் மியாவ் போன்ற வழக்கமான பக்கங்களுடன், நடப்பு அரசியல் விவகாரங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் கொரோனா விளைவு தொடர்பான வெளிவராத பல தகவல்களைத் தாங்கி வருகிறது ஜூனியர் விகடன் இதழ். அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக நாளை (சனிக்கிழமை) கடைக்கு வரும்போது மறக்காமல் ஜூ.வி-யையும் கேட்டு வாங்குங்கள். ஊரடங்கு அமலில் இருக்கும் மே 3 வரை வீட்டிலேயே தனித்திருங்கள்... விகடனோடு இணைந்திருங்கள்!

அடுத்த கட்டுரைக்கு