Published:Updated:

கோட்டை டு செனடாப் சாலை பறந்த கோப்புகள் முதல் எடப்பாடியோடு ஒத்துழைக்காத அதிகாரிகள் வரை... ஜூ.வி ஹைலைட்ஸ்!

Modi with edappadi
Modi with edappadi

கோட்டையிலிருந்து செனடாப் சாலைக்குப் பறந்த கோப்புகள் முதல் முதல்வர் எடப்பாடியுடன் ஒத்துழைக்காத அதிகாரிகள் வரை... நாளை (புதன்கிழமை) முதல் கடைகளில் ஜூ.வி!

கொரோனா ஊரடங்கு தாக்கத்தின் காரணத்தால் கடந்த சில வாரங்களாக மின்னிதழாக வந்துகொண்டிருந்த ஜூனியர் விகடன், புதுப்பொலிவுடன் 22-ம் தேதி (புதன்கிழமை) முதல் மீண்டும் அச்சில் வரத்தொடங்கியது. அதன்படி, கடந்த வாரத்தில் வந்த புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வெளியான இதழ்கள் வாசகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பினால், கடைகளுக்கு விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே, முழுவதுமாக விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்த மிகப்பெரிய விற்பனை மேலும் உற்சாகம் கூட்டியுள்ளது. அந்த உற்சாகம் தந்த உத்வேகத்துடன் அடுத்த இதழும் நாளை (புதன்கிழமை) கடைகளுக்கு வருகிறது.

Sweden
Sweden
இதோ இதழின் ஹைலைட்ஸ்...

கொரோனா குளறுபடிகள்: ஒத்துழைக்காத அதிகாரிகள் திணறும் எடப்பாடி

கோட்டையிலிருந்து செனடாப் சாலைக்குப் பறந்த அரசின் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தும் கோப்புகள் முதல் முதல்வர் எடப்பாடியுடன் ஒத்துழைக்காத அதிகாரிகள் வரை... கொரோனா பாதிப்பு பணியிலும் கோட்டை வட்டாரங்களில் சுற்றும் பரபரப்பான தகவல்களைப் பகிர்கிறார் மிஸ்டர் கழுகார்.

Mr.Kazhugu
Mr.Kazhugu

``நோய் பரவினால்தான் மக்களைக் காப்பாற்ற முடியும்!’’- ஸ்வீடன் போடும் புதுக்கணக்கு

``ஊரடங்கு என்பது குறுகிய காலத்துக்கு நோய்ப் பரவலைத் தடுக்கலாம். மரணங்களைக் குறைக்கலாம். ஆனால், நீண்டகால நோக்கில் பலன் தராது என்று முடிவுக்கு வந்த ஸ்வீடன் நாடு, உலகிலேயே வித்தியாசமான அணுகுமுறையை கையிலெடுத்திருக்கிறது. அப்படி என்ன புதுவிதமான வழிமுறையை அந்நாடு பின்பற்றுகிறது. அதனால் விளைந்த பாஸிட்டிவ், நெகட்டிவ்களை அலசுகிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.

``தமிழகத்தில் சமூகப்பரவல் இல்லை!”- அடித்துச் சொல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்

`கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் சமூகப்பரவல் தொடங்கிவிட்டது; அரசின் நடவடிக்கைகள் மந்தமாக இருக்கின்றன’ என்ற எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் அதிரடி பதில்களும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான விளக்கமும்.

G.K.Vasan
G.K.Vasan

``மத்திய அரசு பால்கனி அரசா... கமலின் கருத்து வெறும் திண்ணைப் பேச்சு!’’ - ஜி.கே.வாசன் காட்டம்'

``மத்திய அரசு சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. மத்திய அரசை குறை சொல்லி அவர்கள் தரவேண்டிய நிதிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டாம்" ஜி.கே.வாசன் சொல்லும் `அடடே' லாஜிக்!

பொன்மகள் வந்தாள்... புதிய திருப்பம் தருவாளா?

`பொன்மகள் வந்தாள்’ படம் மூலம் சூர்யா எடுக்கும் முயற்சியை எதிர்ப்பதா, ஆதரிப்பதா என திரையுலகில் நடக்கும் அரசியல் சடுகுடுவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Suriya - Jyothika
Suriya - Jyothika

பத்தே நிமிடங்களில் பரிசோதனை செய்யும் கருவி!- அசரவைத்த அனூப் தெக்கே வீட்டில் குழு

உலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ள `Chitra GeneLAMP-N’ பரிசோதனைக் கருவி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. `இந்தக் கண்டுபிடிப்பு எப்படி சாத்தியமானது... எப்போது நடைமுறைக்கு வரும்... பி.சி.ஆர் கருவியைவிட `Chitra GeneLAMP-N’ கிட்டு எந்தவகையில் சிறந்தது... என அத்தனை கேள்விகளுக்கும் ஆராய்ச்சிக் குழுவின் தலைமை விஞ்ஞானி அனூப் தெக்கே விரிவான பதில்களுடன்.

மேலும், கழுகார் பதில்கள், ஜெயில்... மதில்... திகில், நீட் வைரஸ், மிஸ்டர் மியாவ் போன்ற வழக்கமான பக்கங்களுடன், நடப்பு அரசியல் விவகாரங்கள் மட்டுமன்றி, தமிழகத்தின் கொரோனா விளைவு தொடர்பான வெளிவராத பல தகவல்களைத் தாங்கி வருகிறது ஜூனியர் விகடன் இதழ். அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக நாளை (புதன்கிழமை) கடைக்கு வரும்போது மறக்காமல் ஜூ.வி-யையும் கேட்டு வாங்குங்கள். ஊரடங்கு அமலில் இருக்கும் மே 3 வரை வீட்டிலேயே தனித்திருங்கள்... விகடனோடு இணைந்திருங்கள்!
அடுத்த கட்டுரைக்கு