வெவ்வேறு அளவுகளில் 3 வட்ட வடிவ அட்டைகளைத் தயார்செய்யவும். அவற்றை, சிறியது முதல் பெரியது வரை ஒன்றின் மீது ஒன்றை அடுக்கி, அதன் மையத்தில் சுழலும் பின்னைப் பொருத்தவும். மேலே உள்ள சிறிய அட்டையில், மெய் எழுத்தின் முதல் எழுத்தை (‘க்’) எழுதிக்கொள்ளவும். நடுவில் உள்ள அட்டையை 12 பிரிவுகளாகப் பிரித்து, 12 உயிர் எழுத்துகளை மாற்றி மாற்றி எழுதிக்கொள்ளவும். அடியில் உள்ள பெரிய அட்டையையும் 12 பிரிவுகளாகப் பிரித்து, ‘க’ முதல் ‘கெள’ வரை எழுதிக்கொள்ளவும்.

முதல் உயிர்மெய் எழுத்தான ‘க’ எப்படி உருவாகும் என்று கேட்டுவிட்டு, மையத்தில் உள்ள உயிர்மெய் எழுத்துகள் எழுதப்பட்ட அட்டையைச் சுழற்றி, ‘அ’ என்ற எழுத்தை ‘க்’ என்ற எழுத்துக்கும் க என்ற எழுத்துக்கும் நடுவில் வருமாறு நிறுத்தவும். இப்போது, க் + அ = க என்று கூற வேண்டும். இதேபோல ஒவ்வோர் எழுத்தையும் மாற்றி மாற்றி உருவாக்கலாம்.

இதுபோல, மற்ற வரிசைகளையும் ஒரு மாணவருக்கு ஒரு சுழல் அட்டை வீதம், 18 மாணவர்கள் மூலம் உயிர்மெய் எழுத்துகளைக் கற்றுக்கொடுக்கலாம். ஆர்வம், கற்கும் திறன் அடிப்படையில் மதிப்பிடலாம்.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி,
பள்ளப்பட்டி, தருமபுரி.

சுட்டி விகடன் வழங்கும் எஃப்.ஏ. பக்கங்கள் பற்றிய கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகளை 91-9940499538 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சொல்லலாம். அல்லது chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். எஃப்.ஏ. செயல்பாடுகளுக்காக சுட்டி விகடனுடன் இணைய விரும்பும் ஆசிரியர்களும் தொடர்புகொள்ளலாம்.