மாணவர்களிடம், சுற்றுப்புறத் தூய்மை மற்றும் கொசுக்களால் ஏற்படும் பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், வகுப்பறையை மருத்துவமனையாக மாற்றினோம். மருத்துவர், செவிலியர் மற்றும் நோயாளிகளாக மாணவர்கள் நடித்தனர்.

நோயாளிகள், தங்களின் பிரச்னைகளை மருத்துவரிடம் சொல்லி, நடித்துக் காட்டினர். மேலும், நோயாளியாக நடிக்கும் மாணவன், தன் வீட்டுக்கு அருகே அசுத்தமாக இருக்கும் இடங்களைப் பற்றிக் கூற, அதனால் என்ன விளைவுகள் வரும் என்று மருத்துவராக நடித்த மாணவன் சொன்னான்.

உதாரணமாக... ஒரு மாணவனின் வீட்டருகே மழைநீர் தேங்கிவிடும். அதனால், ‘‘வீட்டுக்கு அருகே என்னால் விளையாட முடியாது” என்றான். வகுப்பில் அனைவரும் சிரித்தாலும், மழைநீர் தேங்கினால் என்னவாகும் என்று மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கருத்தினைக் கூறினார்கள்.

பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில், சுற்றுப்புறத் தூய்மை மற்றும் கொசு ஒழிப்புப் பற்றிய விழிப்பு உணர்வு பேரணியும் நடத்தினோம். மாணவர்கள், தங்களது சுற்றுப்புறத்தை எந்த அளவு உற்றுநோக்கி இருக்கிறார்கள் என்கிற அடிப்படையில் மதிப்பிடலாம்.

- ஜி.கிறிஸ்டோபர்,
மாநகராட்சி ஆரம்பப் பள்ளி,
ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.