தேவையான பொருள்கள்: கைக்குட்டை அளவிலான சதுரத் துணி அல்லது பாலித்தீன் காகிதம், ஓர் அடி நீளமுள்ள மெல்லிய நூல் துண்டுகள்-4, அழி ரப்பர் அளவிலான சிறிய கல்

செய்முறை:

துணி அல்லது பாலித்தீன் காகிதத்தின் நான்கு முனைகளிலும் ஒவ்வொரு நூலை இறுக்கமாகக் கட்டவும். நான்கு நூல்களின் மறு முனைகளையும் சேர்த்து, சிறிய கல்லைக் கட்டவும். துணியின் மையப் பகுதியைப் பிடித்துத் தூக்கினால், கல் கீழே தொங்கும்.

துணியின் மையப் பகுதியில் இருந்து, கல்லை நோக்கி துணியைச் சுருட்டிக்கொண்டு வரவும். நூல்களையும் சேர்த்து, கல் வரைக்கும் சுருட்டிய பிறகு, சிறிய பந்து போல ஆகிவிடும் இந்த மினி பாராசூட்டினை, மைதானத்தின் நடுவில் நின்றுகொண்டு மேல் நோக்கி வீசவும்.
மேலே கல்லுடன் சென்ற துணி, கீழே வரும்போது மெள்ள மெள்ள விரிந்து, அழகாக இறங்கும்.

புவிஈர்ப்பு விசையினால், எடை அதிகம் உள்ள கல், வேகமாகவும் எடை குறைவான துணி, மெதுவாகவும் இறங்கும். அப்போது, காற்றினால் துணி விரிந்து, மேல் நோக்கிச் செல்லும். புவிஈர்ப்பு விசையும் கல்லின் எடையும் சேர்ந்து, துணியைக் கீழ் நோக்கி இழுக்கும். அதனால், துணி விரிந்து பாராசூட் போல காற்றில் மிதந்து வரும்.

எங்கள் பள்ளி மாணவர்கள், மிகுந்த ஆர்வத்துடன் இதைச் செய்தனர். ஆற்றல் தொடர்பான பாடங்களுக்காக இந்தச் செயல்பாடு உதவும்.

- ப.குணசேகரன்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி.