மாணவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும்.

ஒரு பிரிவினர் கடந்த 10 ஆண்டுகளில் ஊரில் மாறிவிட்ட உணவுப் பழக்கங்கள், புழக்கத்தில் இருந்த நெல் வகைகள், காய்கறிகளின் பெயர்கள், விளைநிலங்களின் பரப்பு, ஊரின் மக்கள்தொகைக்கு ஏற்ப மாறுபட்ட உணவுத் தேவை பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும்.

அடுத்த குழு, கடந்த 10 ஆண்டுகளில் ஊரில் மாறிய மற்றும் அதிகரித்திருக்கும் கட்டடங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும். இரண்டு குழுக்களும் சேகரித்த தகவல்களைப் பட்டியலிட்டு, ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். ஆசிரியர் இந்த இரண்டையும் ஒப்பிட்டு, ஓர் அறிக்கை தருமாறு மூன்றாவது குழுவிடம் கூற வேண்டும்.

உதாரணமாக.... 10 ஆண்டுகளில் ஊரில் எந்த அளவுக்கு விவசாய நிலங்கள் குறைந்திருக்கின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு, ஊரில் விளைவித்த நெற்பயிரின் அளவு குறைந்திருப்பதைக் குறிப்பிட வேண்டும். அதே நேரத்தில், ஊரின் மக்கள்தொகை அதிகரித்திருப்பதால், அதிகப்படியாக எவ்வளவு உணவு தேவை என்பதையும் உத்தேசமாகக் குறிப்பிட வேண்டும்.

இந்தச் செயல்பாடு, மாணவர்கள் தாங்கள் வாழும் ஊரில் உள்ள நிலப்பரப்பை நன்கு புரிந்துகொள்ளவும் உணவு ஆதாரங்களை எப்படி மேம்படுத்துவது என்பதை அறிய உதவும்.

குழுச் செயல்பாடு, சேகரிக்கும் தகவல்களின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.

- .திலீப், அ.உ.நி.பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்.