Published:Updated:

இடதுபக்கம் கழிவறை... வலதுபக்கம் குப்பைத்தொட்டி... நடுவில் பள்ளிக்கூடம்: சென்னையில் ஓர் அவலம்

எம்.மரிய பெல்சின்
சகாயராஜ் மு
இடதுபக்கம் கழிவறை...  வலதுபக்கம் குப்பைத்தொட்டி... நடுவில் பள்ளிக்கூடம்: சென்னையில் ஓர் அவலம்
இடதுபக்கம் கழிவறை... வலதுபக்கம் குப்பைத்தொட்டி... நடுவில் பள்ளிக்கூடம்: சென்னையில் ஓர் அவலம்

சென்னை பிராட்வேயிலுள்ள அரசுப் பள்ளிக்கூட வாசலில்,  வலதுபக்கம் கழிவறையும்,  இடதுபக்கம் குப்பைத் தொட்டிகளும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பிராட்வேயில் உள்ள ஆசீர்வாதபுரம் அம்மன்கோயில் தெருவில், மாநகராட்சிக் கட்டடம் உள்ளது. அதில், மாநகராட்சித் தொடக்கப் பள்ளி மற்றும் அரசினர் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி இயங்குகிறது. சுமார் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளியின் முகப்பில் குப்பைத் தொட்டிகளும், இ-டாய்லெட்டுகளும் உள்ளன. இவை முறையாகப் பராமரிக்கப்படாததால், முடை நாற்றம் வீசுகிறது. குறிப்பாக, குப்பைத்தொட்டிகளின் அருகாமையில் உள்ள கோழிக்கறி கடைகளில் இருந்தும் கழிவுகள் வீசப்படுவதால், அவற்றின்மூலம் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிக் குழந்தைகளில் பலர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துச்சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

டெங்கு, பன்றிக்காய்ச்சல் என உயிரைப் பறிக்கும் நோய்கள் பரவிவரும் சூழலில், மழைக்காலங்களில் நோயின் தாக்குதல் அதிகரிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.