Published:Updated:

ஆற்றல் சேமிப்பு!

‘ஆற்றல் சேமிப்பு’ பாடத்துக்கு உரியது.

ஆற்றல் சேமிப்பு!

‘ஆற்றல் சேமிப்பு’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:

‘எவற்றில் எல்லாம் நாம் சிக்கனப்படுத்தலாம்?’ என்று மாணவர்களிடம் கேட்டேன். பணம், நீர் எனப் பட்டியல் இட்டவர்கள், மின் சிக்கனத்தையும் சொன்னார்கள். மின் சிக்கனத்தை எளிமையாக மாணவர்கள் உணர, சில செயல்பாடுகளைச் செய்தோம்.

ஆற்றல் சேமிப்பு!
ஆற்றல் சேமிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மின் உற்பத்தி முறைகள் பற்றியும், அவற்றைச் சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும்

ஆற்றல் சேமிப்பு!

விளக்கினேன். பிறகு, மாணவர்களை சில குழுக்களாகப் பிரித்து, எவ்வாறெல்லாம் மின்சாரத்தைச் சிக்கனம் செய்யலாம் என செயல்திட்டம் ஒன்றை வழங்கி, தயார்செய்து வரச் சொன்னேன். சூரிய ஆற்றல், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதன் அவசியத்தைத் தங்கள் செயல்திட்டம் மூலம் மாணவர்கள் விளக்கினர். மேலும், LED விளக்குகளின் அவசியம் மற்றும் பயன்பாடு பற்றியும் விளக்கியது, பிற மாணவர்களுக்கு விழிப்புஉணர்வாக அமைந்தது.

மற்றொரு செயல்பாடாக, ஒரு மாத கால அவகாசம் வழங்கினேன். மின் சிக்கன வழிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாதத்துக்குப் பிறகு வீட்டில் குறைவான அளவு மின்சாரத்தைப் பயன்படுத்திய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்றேன். இதன் மூலம், மின் சேமிப்பு மற்றும் அதன் அவசியத்தை அறிந்துகொள்வார்கள்.

- ஜி. கிறிஸ்டோபர்  மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism