Published:Updated:

கண்டுபிடி... கண்டுபிடி!

பொதுவானது

கண்டுபிடி... கண்டுபிடி!

பொதுவானது

Published:Updated:

தேவையான பொருட்கள்: தடிமனான அட்டை, கத்தரிக்கோல், பிளேடு, வண்ணப் பேனாக்கள், சார்ட்.

கண்டுபிடி... கண்டுபிடி!

செய்முறை:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  அட்டையில் வெள்ளைக் காகிதம் ஒன்றை ஒட்ட வேண்டும்.

கண்டுபிடி... கண்டுபிடி!

•  அதே அளவு வண்ண சார்ட்டில், ஆப்பிள், தக்காளி, மாம்பழம் அல்லது விலங்குகள் போன்ற

கண்டுபிடி... கண்டுபிடி!

வடிவில் 4 அல்லது 6 படங்கள் வரைந்து, வெளிக்கோட்டில் வெட்ட வேண்டும். மேல் பகுதியில் வெட்டக் கூடாது. ஒவ்வொரு படத்தையும் தினசரி காலண்டரின் தாளைத் தூக்குவது போல தூக்கி இறக்கலாம். இப்போது, இந்த வண்ண சார்ட்டின் நான்கு ஓரங்களிலும் பசையைத் தடவி, ஏற்கெனவே ஒட்டிய வெள்ளைக் காகித்தின் மேல் ஒட்ட வேண்டும்.

•  இயற்கையில் அமிலம் கிடைக்கும்  பொருட்கள்: இந்தத் தலைப்பை அட்டைப் பெட்டியின் மேல் பகுதியில் ஒட்ட வேண்டும். பொருட்களின் பெயர்களை (ஆப்பிள், தக்காளி, திராட்சை, வினிகர், எலுமிச்சை) வெட்டிய படங்களின் மேல் ஒவ்வொன்றாக எழுதவோ, படமாக ஒட்டவோ செய்ய வேண்டும். அந்தப் பழங்களில் உள்ள அமிலங்களின் பெயர்களை, அந்தந்தப் பழத்தின் பெயர் எழுதப்பட்ட சார்ட் பகுதியை மேலே தூக்கி, அதன் கீழ் உள்ள வெள்ளைக் காகித்தில் எழுத வேண்டும்.

•  ஒரு மாணவரை அழைத்து, அட்டைப் பெட்டியில் எழுதப்பட்டுள்ள ஒரு பழத்தின் பெயரை கூறச்செய்து, அதில் என்ன அமிலம் உள்ளது எனக் கேட்க வேண்டும். மாணவர் கூறும் பதிலின் அடிப்படையில் மதிப்பிடலாம்.

•  மேற்கண்ட அமைப்பில், படத்தின் மேல் உள்ள வினாக்களையும், படத்தின் கீழ் உள்ள விடைகளையும் மாற்றி மாற்றி எழுதி, அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.