



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘OUR WINGED FRIEND’ பாடத்துக்கான செயல்பாடாக, Role play செய்யவைத்தேன். மாணவர்களுக்கு பல்வேறு பறவைகள் போல வேடமிட்டேன். அட்டைகளில் சிறகுகளைத் தயார்செய்து கைகளில் கட்டினேன். கூண்டில் அடைபட்ட பறவையைப் போல ஒரு மாணவிக்கு வேடமிட்டேன். காட்டில் பறவைகள் பேசிக்கொள்வது போல, ஆங்கிலத்தில் உரையாட வைத்தேன். அவர்கள், சொற்கள் தெரியாமல் தயங்கும் இடத்தில் உதவினேன். பறவைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள், அவற்றிலிருந்து எப்படிப் பாதுகாப்பது என மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசிக்கொண்டது, அவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் விதத்தில் அமைந்தது.

- தி.ஆனந்த், ஊ.ஒ.ந.நி.பள்ளி, காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism