
மாணவர்களை குழுக்களாகப் பிரித்தேன். அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக, நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் எங்கெங்கு சென்று வந்தீர்கள் என்றும், அந்த இடங்கள் செயல்படும் விதம் பற்றியும் நடித்துக் காட்டச் சொன்னேன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாணவர்கள், யார் யார் எந்தெந்த இடம் குறித்து நடித்துக் காட்டுவது என முதல் நாளே பேசி, ஒரு பட்டியல் தயாரித்தார்கள். அவை...
1. மருத்துவமனை, 2. நியாயவிலைக் கடை, 3. வங்கி, 4. தபால் நிலையம்.


அடுத்த நாள், ஒவ்வோர் இடத்திலும் நடப்பவற்றை மாணவர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டியபோது,

அந்த இடத்தை எவ்வளவு கூர்ந்து கவனித்திருக்கிறார்கள் என்பதைக்கொண்டு மதிப்பீடு அளித்தேன். மருத்துவமனையில் நோயாளியாக நடித்த மாணவி, டாக்டராக நடித்தவரிடம் ‘வலிக்காம ஊசி போடு’ என்று சொன்னபோது, வகுப்பே சிரிப்பில் ஆழ்ந்தது.
- கரு.செல்வமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.