Published:Updated:

சிரி... அழு... குதி!

‘Grammar’ பாடத்துக்கு உரியது.

சிரி... அழு... குதி!

‘Grammar’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
சிரி... அழு... குதி!

மாணவர்களை வட்டமாக நிற்கச் செய்யவும். Verb, Noun எழுதிய மின் அட்டைகளை

சிரி... அழு... குதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவர்களிடம் கொடுத்து, வாசிக்கச் செய்யவும். மின் அட்டையில் எழுதிய சொற்கள், பெயர்ச் சொல்லா அல்லது ஒரு செயலைக் குறிக்கும் சொல்லா என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும். செயலைக் குறிக்கும் சொல் இருக்கும் அட்டையை வைத்திருப்பவர், அதில் உள்ள செயலைச் செய்ய வேண்டும். (எ-கா) Jump என்றால், குதிக்க வேண்டும். Laugh என்றால், சிரிக்க வேண்டும். Cry என்றால், அழ வேண்டும். இவை எல்லாம் செயலைக் குறிக்கும் Action words என்பதால், இந்தச் சொற்களை  Verb என்கின்றோம் என அறிமுகப்படுத்தவும்.

சிரி... அழு... குதி!
சிரி... அழு... குதி!

அதன் பின், இந்த அட்டைகளை வாங்கிக்கொண்டு, எளிய வாக்கியங்கள் அமையும் வண்ணம் தயாரித்த Noun, Verb மின் அட்டைகளை மாணவர்களிடம் கொடுக்கவும். Noun மின் அட்டை வைத்துள்ள மாணவர், வட்டத்தில் இருந்து வந்து, அவர் வைத்துள்ள Noun உடன் பொருந்தும் Verb ஐ தேர்ந்தெடுத்து, Simple sentence உருவாக்க வேண்டும்.  (எ-கா) Birds fly. Keerthana reads. Ravi writes. They play.

Verb, Noun குறித்த அறிவு, simple sentence உருவாக்கும் திறன், Verb-க்குத் தகுந்த சரியான செயலைச் செய்து காட்டும் திறன், கூச்சம் இன்றிச் செயல்படல், குழுவுடன் இணைந்து செயல்படல் போன்ற திறன்களின் அடிப்படையில் மதிப்பிடலாம்.

- க.சரவணன்,டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி,மதுரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism