எங்கள் வகுப்பில் கணிதப் பாடம் நடத்தி முடித்ததும், அந்தப் பாடத்தில் உள்ள சிறு வினாக்கள், சூத்திரங்களை நினைவில் நிறுத்த, விளையாட்டு ஒன்றை நடத்தினோம்.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்தோம். வகுப்பின் நடுவே நான்கு வாளிகளும்,

நடுவில் ஒரு குடத்தில் நீரும், ஸ்பாஞ்ச் ஒன்றும் வைக்கப்பட்டது. ஆசிரியர் கேள்வி கேட்டதும், பதில் தெரிந்த அணியினர், கையை உயர்த்தி சரியான பதில் அளித்தால், ஒரு முறை ஸ்பாஞ்சை குடத்தில் உள்ள நீரில் நனைத்து, அவர்களுக்கு உரிய வாளியில் நீரைப் பிழிய வேண்டும். இப்படி அனைத்துக் கேள்விகளும் முடிந்தபின், ஒவ்வொரு அணியினரின் வாளியில் இருக்கும் நீரை அளந்து பார்க்க வேண்டும். எந்த அணியினர் அதிக அளவு நீரைச் சேர்த்திருக்கிறார்களோ, அவர்களே வெற்றிபெற்றவர்கள்.


இந்தப் போட்டிகளின் மூலம், குழு மனப்பான்மை மற்றும் ஒற்றுமை ஏற்படுகிறது. ஒரே விதமான கேள்விகள் பலமுறை கேட்கப்படுவதால், அதன் பதில்கள் விளையாட்டு மூலம் மாணவிகள் மனதில் ஆழப்பதியும். ஒவ்வொரு பாடம் முடிவிலும் இந்தப் போட்டிகள் நடத்தும்போது, கணிதம் கற்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
-ப.வெற்றிச்செல்வி, அ.ம.மே.நி.பள்ளி, திட்டக்குடி.