
தேவையான பொருட்கள்:


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தயிர், எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சுப் பழச்சாறு, மாங்காய், நெல்லி, தக்காளி, புளி, திராட்சை, சமையல் உப்பு, சோடா உப்பு, வினிகர்.

செய்முறை:

• மேற்கண்ட பொருட்களை மேசையின் மீது வைக்க வேண்டும்.
• ஒரு மாணவரை அழைத்து கண்ணைக் கட்ட வேண்டும்.
• உணவுப் பொருட்களில் இருந்து ஒவ்வொன்றாக அல்லது சிறிதளவு எடுத்துக்கொடுக்க வேண்டும்.

அதைச் சுவைத்துப் பார்த்து இனிப்பா, கசப்பா, புளிப்பா, உவர்ப்பா அல்லது துவர்ப்பா என்று கூற வேண்டும்.
• நாக்கின் எந்தப் பகுதியில் சுவையை உணர்ந்தார்கள் என்றும் கூற வேண்டும்.
• இதைப் போல ஒவ்வொரு மாணவராக அழைத்து சுவையைக் கூறச்செய்ய வேண்டும்.
இதை எங்கள் வகுப்பில் செய்தபோது, ஒரு மாணவர் வேண்டுமென்றே வாழைப்பழச் சுவையைச் சொல்லாமல், முழுதாகச் சாப்பிட்டுவிட்டு குஷியோடு நழுவியதும், வகுப்பே கலகலப்பானது.
- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.