‘பள்ளியில் இருந்து பேருந்து நிலையத்துக்குச் செல்லும் வழியை வரைந்து காட்டு’ என்று மாணவர்களிடம் கூறியபோது ஆர்வமாக வரைந்தனர். அதே போல தாங்கள் பார்த்த உயரமான கட்டடங்களின் படங்களையும் வரையச் சொன்னோம்.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஓவியம் வரையும்போது, கட்டங்கள் போட்டு வரைவார்கள். அதே போல, நாம்

வரைபடத்தாளில் புள்ளிகள் குறிப்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு கற்பிக்கும்போது, எந்தப் பகுதியில் குறை எண்கள் எழுத வேண்டும் என்பதிலும், எந்தப் பகுதியில் மிகை எண்கள் எழுத வேண்டும் என்பதிலும் குழப்பம் ஏற்படும். அதை நினைவில் நிறுத்த, ஓர் எளிய வழியைக் கண்டுபிடிக்கலாம். முதல் நான்கு மாணவர்களை

ஒரே திசையை நோக்கியும், மற்ற நான்கு மாணவர்களை திசை மாற்றியும் ஒரே நேர்க்கோட்டில் உட்காரவைக்கவும். அதுதான் X அச்சு. அந்தக் கோட்டுக்குச் செங்குத்தாக மற்ற மாணவர்களை அதே போல திசை மாறி உட்காரவைக்கவும். அந்தக் கோடு Y அச்சு. இரண்டு கோடுகளும் சந்திக்கும் மாணவன்தான் ‘O’ என்று விளக்கலாம். அதிலிருந்து, மிகை (+) எண்களையும் குறை (-) எண்களையும் கூறினால், எளிதில் புரிந்துகொள்வார்கள்.
மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.
- தி.முத்துமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.