நில வரைபடத்தின் மூலம், ஊர்களுக்கு இடையேயான தூரத்தைத் தெரிந்துகொள்ள ஒரு செயல்பாடு.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாணவர்களிடம் இந்திய வரைபடத்தைக் கொடுக்கவும். சென்னைக்கும் மும்பைக்கும்

இடையே உள்ள தூரத்தை அளவுகோலால் அளந்து, சென்டிமீட்டரில் எழுதிக்கொள்ளச் சொல்லவும். வரைபடத்தில் உள்ள அளவுத் திட்டத்தில், ஒரு சென்டிமீட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைக்கொண்டு, இரண்டு ஊர்களுக்கும் இடையே உள்ள உண்மையான தொலைவைக் கண்டறியலாம்.
மாதிரிக் கணக்கு: படத்தின் அளவுத் திட்டம் 1 செ.மீ = 43 கி.மீ
சென்னை, மும்பை இடையே வரைபடத்தில் உள்ள தொலைவு = 23 செ.மீ

சென்னை, மும்பை இடையே உண்மையான தொலைவு = 23 X 43 = 989 கி.மீ(இந்த அளவு, வரைப்படத்தில் நூல் பிடித்து அளந்தது. சாலை வழியே என்றால் 1335 கி.மீ)
இது போல வெவ்வேறு நகரங்களுக்கு இடைப்பட்ட தூரத்தை அளந்து, உண்மையான தொலைவைக் கணக்கிடச்செய்து மதிப்பிடலாம்.
- ரத்தின புகழேந்தி,அ.உ.நி.பள்ளி, மன்னம்பாடி.