Published:Updated:

ராட்டினம் சுற்றியது ஞாபகம் வந்ததா?

‘சித்திரைப் பொருட்காட்சி’ பாடத்துக்கு உரியது.

ராட்டினம், குச்சி ஐஸ், பஞ்சு மிட்டாய் என சந்தோஷம் தரும் பொருட்காட்சி என்றாலே சிறார்களுக்கு மகிழ்ச்சிதான். பொருட்காட்சி பற்றிய செயல்பாடு என்றால், துள்ளிக் குதித்து ஆர்வத்துடன் செய்வார்கள்.

ராட்டினம் சுற்றியது ஞாபகம் வந்ததா?
ராட்டினம் சுற்றியது ஞாபகம் வந்ததா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொருட்காட்சி என்றவுடன் என்ன நினைவுக்கு வருகிறது என மாணவர்களிடம் கேட்க

ராட்டினம் சுற்றியது ஞாபகம் வந்ததா?

வேண்டும். அதைப் பட்டியல் போட்டு, ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு மாணவரை, சார்ட்டில்  அழைப்பிதழ் தயாரிக்கச் சொல்ல வேண்டும். ‘சிறுதானியக் கடை’ தலைப்பு கொடுக்கப்பட்ட மாணவர், தங்கள் கடையில் என்னவெல்லாம் இருக்கும் எனச் சொல்லும் விதமான அழைப்பிதழ் தயார்செய்ய வேண்டும்.

மணிகள், வண்ணக் காகிதம், வண்ணப் படங்கள்கொண்டும் அழைப்பிதழைத் தயார்செய்யலாம். மாணவரின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப வாசகங்களை எழுதுதல், தயாரிக்கும் விதத்தில் புதுமை போன்றவற்றின்  அடிப்படையில் மதிப்பீடு வழங்கலாம். இதன் மூலம் மாணவர்களின் கற்பனைத்திறன் மேம்படும்.

- ந.பரிதாஜான், ஊ.ஒ.தொ.பள்ளி, பாலக்கோடு தெற்கு, தருமபுரி.