Published:Updated:

டெங்கு காய்ச்சலுக்கு நான் பயப்பட மாட்டேன்!

‘நோய்த் தடுப்பும் சுகாதாரமும்’ பாடத்துக்கு உரியது.

ழை வந்ததும், குஷியோடு கப்பல் செய்து மழைநீரில் விட்டிருப்பீர்களே...

டெங்கு காய்ச்சலுக்கு நான் பயப்பட மாட்டேன்!

மழைக் காலம் நமக்கு மட்டுமல்ல, நோயைப் பரப்பும் கிருமிகளுக்கும் பிடிக்கும்.   அறிவியல் பாடத்திலேயே நோய்த் தடுப்பு பற்றி வந்திருக்கிறதே. அதை ஆசிரியர்கள், செயல்பாடு ஒன்றின் மூலம் எளிதாகக் கற்பிக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டெங்கு காய்ச்சலுக்கு நான் பயப்பட மாட்டேன்!

அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ அல்லது சித்தா மருத்துவமனைக்கோ

டெங்கு காய்ச்சலுக்கு நான் பயப்பட மாட்டேன்!

மாணவர்களோடு செல்லவும். அங்குள்ள மருத்துவரின் உதவியால், மழைக்காலங்களில் வரும் நோய்கள் குறித்தும் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தச் செய்யலாம். அதன் பின், கொசுக்களால் உருவாகும் நோய்கள் குறித்து மருத்துவருடன் கலந்துரையாடச் செய்யலாம். மாணவர்கள், தங்களின் சந்தேகங்களைக் கேட்பதன் மூலம், கொசுக்களால் ஏற்படும் நோய்கள் குறித்து தெளிவுபெறுவார்கள்.  நோய்களைத் தடுக்கும் நடவடிக்கையாக, கொசு உற்பத்தியாகாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உணரச்செய்யலாம்.

மருத்துவமனையில் மாணவர்களுக்கு நிலவேம்புக் கஷாயம் கொடுத்து, டெங்கு முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தலாம்.

களப்பயணத்துக்குப் பிறகு, மருத்துவரிடம் பெற்ற தகவல்களைக் குழுவில் கலந்துரையாடச் செய்து, மழைக்காலத்தில் ஏற்படும் நோய் குறித்தும் அதனைத் தடுக்கும் முறை குறித்தும் பட்டியலிடச் செய்யலாம். 

மாணவர்களின் ஆர்வத்தை வைத்து மதிப்பீடு அளிக்கலாம். 

- க.சரவணன், டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி, கீழச்சந்தைப்பேட்டை, மதுரை.