Published:Updated:

வாக்காளப் பெருமக்களே!

‘நமது அரசாங்கம்’ பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி

‘‘கிளாஸ் லீடர் பதவிக்கு யாரெல்லாம் போட்டியிடுகிறீர்கள்?’’ என்றதும் நான்கு மாணவர்கள் கைதூக்கினர். தேர்தலுக்கு வகுப்பறை தயாரானது.

வாக்காளப் பெருமக்களே!

‘‘தேர்தல் என்றால் எப்படி சார்?’’ என மாணவர்கள் குழம்பியபடியே கேட்க, ‘‘அதைச் செயல்பாடாகவே செய்துவிடுவோம்’’ என்றேன்.

வாக்காளப் பெருமக்களே!

முதலில், கிளாஸ் லீடர் பதவிக்குப் போட்டியிடும் மாணவர்களை அறிமுகம் செய்தோம்.

வாக்காளப் பெருமக்களே!

பிறகு, வாக்குப்பதிவு அலுவலர்களாக மாணவர்களையே நியமனம் செய்தோம். முதல் வாக்குப்பதிவு அலுவலர், மாணவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக வாசித்தார். இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலர், விரலில் மை வைத்தார்.  மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலர், கையொப்பம் பெற்று வாக்குச்சீட்டை வழங்கினார். வாக்காள மாணவர்கள், தமக்கு விருப்பமான வேட்பாளரின், பெயர் அருகில் முத்திரையைப் பதித்து, வாக்குப்பதிவுப் பெட்டியில் போட்டனர். அனைத்து மாணவர்களும் வாக்குகளைப் பதிவு செய்தபின், வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டன. வெற்றிபெற்ற வேட்பாளர், கிளாஸ் லீடராகத் தேர்வானார்.

வாக்காளப் பெருமக்களே!

இதன் மூலம் மாணவர்கள், வாக்குரிமையின் சிறப்புப் பற்றியும் நம் நாட்டில் தேர்தல் நடத்தும் விதிமுறைகளைப் பற்றியும் அறிந்துகொண்டனர்.

- ஜி.கிறிஸ்டோபர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு