Published:Updated:

அஞ்சு பைசா, பத்து பைசா அருங்காட்சியகம்!

‘சென்னை அருங்காட்சியகம்’ பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி

‘அருங்காட்சியகம் அமைப்போமா?’ என்று சொன்னவுடன் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். வகுப்பறையையே அருங்காட்சியகமாக மாற்றும் வகையில், மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்துக்கொண்டேன்.

அஞ்சு பைசா, பத்து பைசா அருங்காட்சியகம்!
அஞ்சு பைசா, பத்து பைசா அருங்காட்சியகம்!

ஒரு குழுவினர் ஓவியங்கள், அஞ்சல் தலைகள், நாணயங்கள் ஆகியவற்றைச் சேகரித்து

அஞ்சு பைசா, பத்து பைசா அருங்காட்சியகம்!

வந்து காட்சியகத்தை அழகுபட அமைத்தனர். மற்றொரு குழுவினர், பறவைகள், விலங்குப் பொம்மைகள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு பக்கம் அருங்காட்சியகம் அமைத்தனர். அதில் ஒரு மாணவர், 5 பைசா, 10 பைசா நாணயங்களை வைத்திருந்தான். ‘ஏன் இவற்றை வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டதற்கு, ‘இந்த நாணயங்கள் இப்போது கிடைப்பது இல்லை டீச்சர். அதனால்தான், கண்காட்சியாக வைத்தேன்’ என்று கூறி அசத்தினான்.

அஞ்சு பைசா, பத்து பைசா அருங்காட்சியகம்!

இந்த அருங்காட்சியகத்தைப் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பார்க்கச் செய்தனர். மாணவர்களின் ஈடுபாடு, பொருட்களைச் சேகரித்த விதம், செயல்திறன் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு மதிப்பீடு வழங்கினேன்.

 - மு.முத்துலெட்சுமி சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு