Published:Updated:

ஒரு நாள் விவசாயி!

‘வேளாண்மை’ பாடத்துக்கு உரியது.

‘வேளாண்மை’ பாடத்துக்கான செயல்பாடாகக் களப் பயணம் சென்றோம்.

ஒரு நாள் விவசாயி!
ஒரு நாள் விவசாயி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பள்ளிக்கு அருகில் இருக்கும் வயலுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று, அங்கு

ஒரு நாள் விவசாயி!

வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயிகளிடம், விதைப்பது முதல் அறுவடை வரை எப்படிச் செய்வது என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

இப்போது, நாற்று நட்டு நன்கு வளர்ந்திருக்கும் பருவம். அவை, இன்னும் நன்கு வளர இயற்கை உரத்தைத் தூவத் தயாராக வைத்திருந்தனர். அந்த உரத்தை எங்கள் வகுப்பு மாணவர் எடுத்துச் சென்று பயிர்களுக்குத் தூவினார்.

பயிர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பூச்சிகளை அழிக்க, மருந்து அடிக்கும் மெஷின் இருந்தது. அதில் பூச்சி மருந்து ஊற்றாமல் காலியாக இருந்தது. ஒரு மாணவர், அதை எப்படி இயக்குவது என்பதைக் கேட்டு, அவர் சொன்னது போல முதுகில் மாட்டிக்கொண்டு இயக்கிப் பார்த்தார்.

ஒரு நாள் விவசாயி!

களப்பயணமாகக் கற்றுக்கொள்ளும்போது, மாணவர்கள் உற்சாகமாக இருப்பதையும் உணரமுடிந்தது. நீங்களும் செய்துபாருங்கள்.

 - தி.ஆனந்த் ஊ.ஒ.ந.நி.பள்ளி, காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.