Published:Updated:

தொழிற்பெயர் விளையாட்டு!

‘தமிழ் இலக்கணம்’ பகுதிக்கு உரியது.

ட்டையில் பெரிய வட்டம் (A) மற்றும் ஒரே அளவில் 2 சிறிய வட்டங்கள் (B & C) வெட்டி எடுக்க வேண்டும்.

தொழிற்பெயர் விளையாட்டு!

பெரிய வட்டம் (A) விளிம்பில், வினைப்பெயர்கள் (ஆடு, வாழ், போ, வா, உணர், செய், கோள், கேள், பாய், கோடு, கொல், பற, புளி, மற, புல) எழுதிக்கொள்ள வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தொழிற்பெயர் விளையாட்டு!

சிறிய வட்டம் (B) விளிம்பில், தொழிற்பெயர் விகுதிகள் (தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ,

தொழிற்பெயர் விளையாட்டு!

தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, ஐம், ஆல்) எழுதிக்கொள்ள வேண்டும்.

சிறிய வட்டம் (C) விளிம்பின் ஓரத்தில், ஒரு சிறிய வட்டம் வெட்டி எடுக்க வேண்டும்.

A மீது B, B மீது C என ஒன்றின் மீது ஒன்றாகவைத்து, சுழல் அட்டை ஊசியால் பொருத்த வேண்டும். சுழல் அட்டையின் பின்புறத்தில், ஓர் அம்புக்குறியைப் பொருத்த வேண்டும்.

ஒரு மாணவர், 5 நிமிடங்கள் வரை சுழல் அட்டையைப் பயன்படுத்தலாம்.

மாணவர்கள் பெரிய வட்டத்தைச் சுழற்ற வேண்டும். சுழன்று நின்றவுடன், அம்புக்குறி காட்டும் வினைப் பெயருக்குப்  பொருத்தமான விகுதியை, வட்டம் C-ஐ நகர்த்தி, பொருத்திக் காட்டி, உருவாகும் தொழிற்பெயரைக் கூற வேண்டும்.

5 நிமிடங்களில் யார் அதிகமான தொழிற்பெயர்களைச் சரியாகவும் விரைவாகவும் கண்டுபிடிக்கிறாரோ, அவரே வெற்றிபெற்றவர்.

- மூ.சங்கீதா, அ.பெ.மே.நி.பள்ளி, திருவண்ணாமலை.