Published:Updated:

ஆங்கிலத்திலும் அசத்துவோம்!

பொதுவானது

மாணவர்கள், ஆங்கிலத்தில் உரையாடும் திறனை மேம்படுத்த, செயல்பாடு ஒன்றைச் செய்யலாம். மாணவர்களை 5 குழுக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

ஆங்கிலத்திலும் அசத்துவோம்!
ஆங்கிலத்திலும் அசத்துவோம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆங்கிலத்திலும் அசத்துவோம்!

முதல் குழு, பறவைகளின் புகைப்படங்களைச் சேகரித்து, அந்தப் பறவைகளைப் பற்றிய

ஆங்கிலத்திலும் அசத்துவோம்!

புகைப்படத் தொகுப்பைத் தயாரிக்க வேண்டும். இரண்டாம் குழு, பறவைகளை மையமாகக்கொண்டு கவிதை எழுத வேண்டும். ஆங்கிலத்தில் இயலாவிட்டால், தமிழில் எழுதச் சொல்லலாம். மூன்றாம் குழு, பறவைகளின் இறகுகளைச் சேகரித்து, அலங்கார ஓவியம் தயாரிக்க வேண்டும். நான்காம் குழு, காகிதங்களைக்கொண்டு பறவைகளை உருவாக்க வேண்டும். ஐந்தாம் குழு, கூண்டில் உள்ள பறவைகளின் மாதிரியைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு குழுவும் தயாரித்த தங்கள் செயல்பாடுகளைப் பற்றி, பிற குழுவுடன் ஆங்கிலத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆங்கிலப் பேச்சுத்திறன், குழு மனப்பான்மை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடலாம்.

-ஸ்ரீ .திலிப், அ.மே.நி.பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்.

எஃப்.ஏ புராஷெக்ட் போட்டி!

சுட்டி நண்பர்களே... இந்த வருடம் இரண்டாம் பருவத்தில், உங்கள் கற்பனையில் உதித்த செயல்திட்டங்களைத் (projects) தரமான புகைப்படங்களாக எடுங்கள். அந்த புராஜெக்ட்டின் செய்முறை விளக்கத்தையும் எழுதி, எங்களுக்கு அனுப்புங்கள். கூடவே, உங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பள்ளியின் பெயர், முகவரி, அலைபேசி எண் ஆகிய விவரங்களைத் தவறாமல் குறிப்பிட்டு அனுப்புங்கள். ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் சிறந்த செயல்திட்டங்களை அனுப்பிவைக்கலாம். தேர்வுசெய்யப்படும் செயல்திட்டங்களுக்குப் பரிசாக, புத்தகங்களும் சான்றிதழும் வழங்கப்படும்.

உங்கள் செயல்திட்டங்கள், எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 20.12.2015.

அனுப்பவேண்டிய முகவரி:

‘எஃப்.ஏ புராஜெக்ட் போட்டி’ சுட்டி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

இ-மெயிலில் அனுப்ப விரும்புவோர்:chuttidesk@vikatan.comஎன்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

தொகுப்பு: வி.எஸ்.சரவணன் படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ், க.சதீஸ்குமார், சு.ரகுராம்

சுட்டி விகடன் வழங்கும் எஃப்.ஏ பக்கங்கள் பற்றிய கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகளை 91-9940499538 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சொல்லலாம். அல்லது chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். எஃப்.ஏ செயல்பாடுகளுக்காக, சுட்டி விகடனுடன் இணைய விரும்பும் ஆசிரியர்களும் தொடர்புகொள்ளலாம்.