Published:Updated:

FA பக்கங்கள்

FA பக்கங்கள்

FA பக்கங்கள்

FA பக்கங்கள்

Published:Updated:
FA பக்கங்கள்
FA பக்கங்கள்

கப்பலேறி வந்த மதிப்பீடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

FA பக்கங்கள்

‘பொருட்கள் மிதத்தல்’ தொடர்பான பாடத்தில், கப்பல் பற்றிய செய்திகளை எங்கள் ஆசிரியர் சேகரிக்கச் சொன்னார். நான், கப்பலையே செய்துவிட்டேன். அந்தக் கப்பலைக் காட்டி, அதில் எந்தப் பாகம் வரை நீரில் மூழ்கும், எதனால் மிதக்கிறது என்பதை விளக்கினேன். எனது செயல்பாட்டை எல்லா மாணவர்களிடமும் காண்பித்து, என்னை உற்சாகப்படுத்தினார். மதிப்பீடு வாங்கித் தந்த கப்பலை, பத்திரமாக வைத்திருக்கிறேன்.

- ஆர்.தஸ்லீம் ஃபஜ்மினா,7-ம் வகுப்பு. 

சுத்தமான நீர்!

FA பக்கங்கள்

‘பொருட்களைப் பிரித்தல்’ பாடத்துக்கு, நீரை வடிகட்டும் கருவியின் மாதிரியைச் செய்யத் திட்டமிட்டேன். அட்டை, பிளாஸ்டிக் பாட்டில், புனல் ஆகியவற்றால்  அழகான வடிகட்டி செய்தேன். அதன் பயன்பாட்டை விளக்கி, மதிப்பீடு பெற்றேன்.

- யோகஸ்ரீ , 7-ம் வகுப்பு.

நியூக்ளியஸ்!

FA பக்கங்கள்

செல்லின் முக்கியப் பகுதியான நியூக்ளியஸின் உட்கருவை தெர்மக்கோலில் வரைந்து, பாகங்களுக்கு வண்ணம் தீட்டி, ஆசிரியரிடம் காண்பித்தேன். அதை உருவாக்கிய விதத்தை மற்ற மாணவர்களுக்கும் விளக்கமாகக் கூறச் சொன்னார். முழு மதிப்பீடும் அளித்தார்.

 - க.ஸ்வாதி, 7-ம் வகுப்பு.

அரசு மேல்நிலைப் பள்ளி, திருமுல்லை வாசல், கொள்ளிடம்.

 கோணம் காட்டும் கடிகாரம்!

FA பக்கங்கள்

சுட்டி விகடன் எஃப்.ஏ பக்கத்தில், கடிகாரத்தில் கோணங்கள் உருவாக்கலாம் என விளக்கியதைப் படித்தவுடன், நானும் அவ்வாறு செய்யத் திட்டமிட்டேன். அட்டையில் கடிகாரம் செய்து, முட்களை 9 மணி காட்டுமாறு செய்தால், 90 டிகிரி கோணம் எனச் சொல்லி, மதிப்பீடு பெற்றேன்.

-ப.கலைமதி, 6-ம் வகுப்பு.

ஊசலில் கோணம்!

FA பக்கங்கள்

விளையாட்டையே செயல்பாடாக மாற்றத் திட்டமிட்டோம். ஊசல் விளையாட்டில், கோணங்களை உருவாக்கலாம் என ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வந்தது. அதை, நண்பர்களோடு செயல்படுத்தி,  நேர்கோணம் 180 டிகிரி என்பதை விளக்கினோம். ஆசிரியர் மகிழ்ச்சியோடு பாராட்டி, மதிப்பீடு அளித்தார்.

- வீ.சரவணன், செ.செல்வம், ரா.ராஜதுரை, ரா.தினேஷ்,   6-ம் வகுப்பு.

தென்னம்பாளை கப்பல்!

FA பக்கங்கள்

சமூக அறிவியல் பாடத்துக்காக, தென்னம்பாளையை வைத்து, பாய்மரக் கப்பல் செய்தேன். மயிலிறகை வைத்து  அழகுபடுத்தி, ஆசிரியரிடம் காண்பித்தேன். கிடைக்கும் பொருட்களை வைத்து, சிறப்பான செயல்பாடு செய்திருப்பதாகப் பாராட்டி, மதிப்பீடு அளித்தார்.

- கோ.சுகன்யா, 9-ம் வகுப்பு.

அரசினர் உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.

 எண் ஓவியம்!

FA பக்கங்கள்

கலைக் கல்வி  பாடத்திட்டத்துக்காக,  9 என்ற எண்ணில் ஓவியம் வரைவோம் என்றவுடன், நண்பர்களோடு இணைந்து செய்யத் திட்டமிட்டோம். ஆசிரியர், 9 என்ற எண்ணை பேப்பரில் எழுதிக் கொடுக்க, அதை ஓவியமாக மாற்றி,  அழகான வண்ணம் தீட்டி, ஆசிரியரிடம் ‘வெரிகுட்’ வாங்கினோம்.

- ரா.சுஸ்மிதா, மு.ஹர்சினி,     ப.தமிழ்மணி, க.சந்தோஷ்,  1-ம் வகுப்பு.

நாங்களே உருவாக்கிய மணிபர்ஸ்!

FA பக்கங்கள்

வாழ்க்கைக் கல்வி பகுதிக்கு, வீணாகிய பொருட்களில் இருந்து, செயல்பாடு செய்துவர வேண்டும் என ஆசிரியர் கூறினார். பழைய தாள்களில் மணிபர்ஸ் செய்து, அதில் என் பெற்றோரின் புகைப்படங்களை ஒட்டினோம். ஆசிரியர் பாராட்டி, மதிப்பெண் வழங்கினார்.

- வி.பிரியா, பா.கீர்த்தனா,5-ம் வகுப்பு.

சுட்டி விகடன் பெற்றுத் தந்த மதிப்பீடு!

FA பக்கங்கள்

‘பருப்பொருள்களும் பல்வகை வீடுகளும்’ பாடத்துக்கு, உலகில் உள்ள சிறப்புமிக்க கட்டடங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, படத்தொகுப்பு உருவாக்கி வர வேண்டும் என்றார் ஆசிரியர். சுட்டி விகடன் ஆல்பத்தில் தந்த படங்களைக் கத்தரித்து, அழகான படத்தொகுப்பை உருவாக்கி, மதிப்பீடு  பெற்றோம்.

- மூ.தனசீலன், வி.பிரியா,5-ம் வகுப்பு.

டாக்டர் டி.திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை-9.

ஓவியத்துக்கு மதிப்பீடு!

FA பக்கங்கள்

நம் அன்றாட வாழ்வில் பொருட்களைப் பிரித்தல் எப்படி நடக்கிறது என்பதைப் பட்டியல் இட்டோம். அந்தச் சம்பவங்களை, சார்ட்டில் ஓவியமாக வரைந்தோம். ஒவ்வோர் ஓவியத்திலும், எந்த விதத்தில் பொருட்கள் பிரிக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டோம். ஆசிரியர் பாராட்டி, மதிப்பீடு அளித்தார்.

- திவ்யா, ஜெயலெட்சுமி, கோகிலா, 7-ம் வகுப்பு.

VOCABULARY

FA பக்கங்கள்

Vocabulary-யை மேம்படுத்தும் விதத்தில், நாங்கள் குழுவாகச் செய்த செயல்பாடு இது. கிழிந்த, ஒருபுறம் மட்டும் பயன்படுத்திய காகிதங்களில் விதவிதமான ஸ்கிராப் புக் தயார்செய்தோம். அதில், ஆங்கிலச் சொற்களை எழுதி, ஆசிரியரிடம் காண்பித்து மதிப்பீடு பெற்றோம்.

- பி.பிரேம்குமார், கே.கீர்த்தனா, பி.ஜீவிதா, புனிதவள்ளி, 

எஸ்.அம்சவள்ளி, ஆர்.கீர்த்தனா,  8-ம் வகுப்பு.

கிளிக்கூண்டு!

FA பக்கங்கள்

‘Our winged friends’ என்ற பாடத்துக்காக, தெர்மக்கோல், அட்டை, சிறு குச்சிகள் ஆகியவற்றை வைத்து, கிளிக்கூண்டுகள் செய்தோம். அட்டையில், நாங்கள் அழகாகச் செய்த கிளியைக் கூண்டுக்குள் வைத்தோம். பறவைகள், விலங்குகளுக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்துகளை  ஆங்கிலத்தில் கூறினோம். எங்களின் இந்தச் செயல்பாடு ஆசிரியருக்கு மிகவும் பிடித்துப்போனது. மதிப்பீட்டை அள்ளித் தந்தார்.

- ஈ.சாருமதி, எஸ்.சூர்ய பிரகாஷ், 8-ம் வகுப்பு.

அரசினர் மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்.

 டோரா, சோட்டோ பீம்!

FA பக்கங்கள்

‘கலையும் கைவண்ணமும்’ பாடத்துக்காக, எங்கள் வகுப்புச் சுவரில், எனக்குப் பிடித்த டோரா மற்றும் சோட்டா பீம் ஓவியங்களை  வரைந்தேன். நண்பர்கள் அதைப் பார்த்துவிட்டு, சூப்பரா இருக்கு என்றனர். ஆசிரியரும் பாராட்டி மதிப்பீடு அளித்தார்.

- கே.பத்மப்ரியா, 4-ம் வகுப்பு.ஊ.ஒ.ந.நி. பள்ளி, தெ.வ.புத்தூர், விருத்தாசலம்.

மழை வருது மழை வருது!

FA பக்கங்கள்

சென்னை மற்றும் கடலூரில் அதிக அளவில் மழை பெய்யும் செய்திகளைச் செய்தித்தாளில் படித்துவந்தோம். எங்களைப் போன்ற மாணவர்கள் பெருமழையால் சிரமப்பட்டது அறிந்து கவலைப்பட்டோம். அந்தச் செய்திகளை சேகரித்து, தினந்தோறும்  எங்கள் நண்பர்களிடம் காட்டினோம். அதையே, பேரிடர் மேலாண்மைப் பாடத்துக்கான செயல்பாடாகவும் மாற்றி, மதிப்பீடு பெற்றோம்.

- பி.ஜீவிதா, அபிநயா, 5-ம் வகுப்பு. ஊ.ஒ.தொ.பள்ளி, ராகல்பாவி, உடுமலைப்பேட்டை.

வெல்கம் சோட்டோ பீம்!

FA பக்கங்கள்

எங்கள் பள்ளியில் தந்த டிராயிங் புக்கில் எனக்குப் பிடித்த சோட்டா பீம், கிருஷ்ணர் படங்களை வரைந்து, ஆசிரியரிடம் காண்பித்து, மதிப்பீடு  பெற்றேன்.

- ச.மோதிஸ், 5-ம் வகுப்பு. ஊ.ஒ.தொ.பள்ளி, கீழ பூசாரிப்பட்டி, மணப்பாறை.

 செல்லின் அமைப்பு!

FA பக்கங்கள்

அறிவியல் பாடச் செயல்பாடாக, செல் அமைப்பை வரைந்து, அதன் பகுதிகளைத் தனித்தனி வண்ணங்களால் பிரித்துக் காட்டினோம். எங்களின் இந்தச் செயல்பாட்டை, வகுப்பறையில் கண்காட்சியாக வைத்து, மற்ற மாணவர்களையும் பார்க்கச் செய்தோம். ஆசிரியர், எங்களுக்கு முழு மதிப்பீடு அளித்தார்.

- க.விக்னேஷ், ம.கார்த்திகேயன், ப.சந்தோஷ், செ.சங்கமேஸ்வரன், ர.வடிவேலன், ப.பூவேந்திரன்,    ர.சிவப்பிரசாந்த், 6-ம் வகுப்பு.

அழகிய வீடு!

FA பக்கங்கள்

‘பருப்பொருள்களும் பல்வகை வீடுகளும்’ எனும் பாடத்தின் செயல்பாடாக, அட்டைகளில் அழகிய வீடு உருவாக்கினேன். வீட்டுக்கு  வண்ணம் பூசுவதுபோல, வண்ணக் காகிதங்களை ஒட்டினேன். ஆசிரியரிடம் பாராட்டையும் மதிப்பீட்டையும் பெற்றேன்.

- க.விக்னேஷ், 5-ம் வகுப்பு.

விலங்குகள் காட்சியகம்!

FA பக்கங்கள்

‘A Tiger in the Zoo’ என்ற பாடத்துக்காக, நண்பர்கள் குழுவாக இணைந்து, செயல்பாடு ஒன்றைச் செய்தோம். தெர்மக்கோல், அட்டை, குச்சிகள், வண்ணக் காகிதங்கள் ஆகியவற்றால், ‘உயிரியல் காட்சியகம்’ மாதிரியை உருவாக்கினோம். ஒவ்வொரு கூண்டிலும் விலங்குப் பொம்மைகளை வைத்தோம். மதிப்பீடு பெற்றோம்.

- த.லோகேஸ்வரன், ச.தனபால், ப.நவீனா, ர.உமாமகேஸ்வரி, 6-ம் வகுப்பு.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுண்டக்காம்பாளையம், ஊத்துக்குளி.

யூஸ் அண்டு யூஸ்!

FA பக்கங்கள்

ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி வீசும் பொருட்களை வைத்து, அழகான செயல்பாடு செய்யத் திட்டமிட்டோம். ஒருபுறம் பயன்படுத்திய சார்ட்டின் மறு புறத்தில், ஐஸ் குச்சிகளை வெட்டி, ஒட்டி நடனமாடும் மயிலை உருவாக்கினோம். மதிப்பீட்டைக் கொத்திச் சென்றோம்.

- ச.சஞ்சய், க.மதுமிதா,5-ம் வகுப்பு.          

Wall hangings!

FA பக்கங்கள்

சார்ட்டில், தீக்குச்சிகளை நட்சத்திர வடிவில் அழகாக ஒட்டினோம். அதன் நடுவில் பிளாஸ்டிக் பூவை இணைத்து, ‘வால் ஹேங்’ செய்தோம். கொட்டாங்குச்சியைச் சுத்தம்செய்து, பெயின்ட் அடித்தோம். அதில், வீட்டின் மூலையில் கிடந்த பொம்மையை ஒட்டி, அதைச் சுற்றி மணிகளை ஒட்டி அழகுபடுத்தினோம். இந்தச் செயல்பாட்டைப் பார்த்து, எங்க டீச்சர் அசந்துபோனாங்க. மதிப்பீட்டை அள்ளிக்கொடுத்தாங்க.

- ஆ.மீனாட்சி, ச.மதன்,5-ம் வகுப்பு.          

யாரும் பயப்படாத ஆங்ரி பேர்டு!

FA பக்கங்கள்

காகிதத் தட்டில், சார்ட் துண்டுகளால் கண், காது, மூக்கு என ஒட்டினோம். மாடு மற்றும் ஆங்ரி பேர்டு உருவங்களைத் தயார்செய்தோம். அவற்றை, முகமூடி போல வைத்து, எங்கள் வகுப்பு மாணவர்களை மிரட்டினோம். யாருமே பயப்படலை. அதனால் என்ன? எங்கள் டீச்சர் பாராட்டி, நல்ல மதிப்பீடு கொடுத்தாங்களே.

- ந.ஃபாசில், மு.பிரதிஷா,5-ம் வகுப்பு.

 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பாலக்கோடு தெற்கு, தருமபுரி.

 நீராவி இயந்திரம்!

FA பக்கங்கள்

குழுச் செயல்பாடாக, நீராவி இயந்திரம் செய்யத் திட்டமிட்டோம்.

ஒரு தடிமனான அட்டை, சார்ட், குச்சி, செல்லோஃபன் டேப், மோட்டார், விளக்கு, பேட்டரி, நூல், பேனா ரீஃபிள், தெர்மக்கோல், உருளையான டப்பாக்களைக்கொண்டு நீராவி இயந்திரம் செய்தோம். ஆசிரியர் எங்களைப் பாராட்டி, மற்ற வகுப்பு மாணவர்களிடமும் காண்பித்தார். நல்ல மதிப்பீடும் அளித்தார்.

- வி.ஆர்.விஷ்ணுராம், எல்.விஜய், எஸ்.சரவணபாலாஜி,எஸ்.அருண்குமார், 9-ம் வகுப்பு.

அழகு ஓவியங்கள்!

FA பக்கங்கள்

‘அழிந்த உயிரினங்கள்’ பற்றி ஆசிரியர் சொன்னதும், டைனோசர் வரைந்து, வண்ணம் தீட்டினேன்.

- சந்தியா, 6-ம் வகுப்பு.

செல்போனில், ‘டாக்கிங் டாம்’ எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதையே நான் வரைந்து காட்டி. மதிப்பீட்டைப் பெற்றேன்.

- பிரபு, 8-ம் வகுப்பு. எஸ்.ஆர்.கே.வி. குருகுலம் உயர்நிலைப் பள்ளி, பெரியநாயக்கன்பாளையம், கோயம்புத்தூர்.

புலிகளைக் காப்போம்!

FA பக்கங்கள்

‘Tiger’ பாடலுக்காக, புலியை வரைந்தேன். அதன் வயிற்றுப் பகுதியில், நம் தேசிய விலங்கைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை ஆங்கிலத்தில் எழுதினேன். ஆசிரியர், என்னைப் பாராட்டி மதிப்பீடு அளித்தார். 

- கெளசல்யா, 8-ம் வகுப்பு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, நவமால்மருதூர், கண்டமங்கலம் ஒன்றியம், விழுப்புரம்.

 பிரெயில் எழுத்துகள்!

FA பக்கங்கள்

சார்ட்டில் பிரெயில் எழுத்துகளை உருவாக்கினோம். அதை எப்படிப் படிப்பது என்று வகுப்பு மாணவர்களுக்கு விளக்கினோம். எங்களைப் பாராட்டிய ஆசிரியர், முழு மதிப்பீடு அளித்தார்.

- எம்.கார்த்தி, எம்.வர்ஷினி,  ஏ.யசோதா, எம்.கற்பகம்.7-ம் வகுப்பு.

கூட்டு உருவங்கள்!

FA பக்கங்கள்

கூட்டு உருவங்கள் வரைந்து, அவற்றின் பரப்பளவைக் கண்டுபிடித்து, மதிப்பீடு பெற்றோம்.

- ஆத்திக்கண்ணு, தானியேல்பிரபு, சஞ்சீவி, கி.கார்த்திகேயன்,8-ம் வகுப்பு.

தங்க விகிதம்!

1:16 என்ற விகிதம், தங்க விகிதம் ஆகும். இந்த விகிதத்தில் அமைந்த படங்களை வரைந்து, மதிப்பீடு  பெற்றோம். 10:16 மற்றும் 5:8 என்ற அளவுகளில் படங்களை வரைந்தோம்.

- மு.வர்ஷினி, ந.கற்பகம்,7-ம் வகுப்பு.

FA பக்கங்கள்

சுழல் அட்டை!

கால அளவைகளில் தரப்பட்ட அட்டவணையை, சுழல் அட்டையில் எழுதி, ஒரே வண்ணம் உள்ளவை பொருந்துமாறு அமைத்தேன்.ஆசிரியரின் பாராட்டையும் மதிப்பீட்டையும் பெற்றேன்.

- ஐ.மோனிஷா விஷ்ணுவர்த்தினி, 6-ம் வகுப்பு.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ரமணமுதலிபுதூர், ஆனைமலை.

 குப்பைத்தொட்டியில் போடும் முன் யோசியுங்கள்!

FA பக்கங்கள்

பள்ளியின் விளையாட்டு தின விழாவுக்கு, எங்கள் வகுப்பறையை அலங்கரிக்கத் திட்டமிட்டோம். கடைகளில் பொருட்களை வாங்காமல், நாமே உருவாக்கினால் என்ன என்று யோசித்தோம். எங்கள் வீடுகளிலும், பள்ளியிலும் உள்ள பொருட்களைச் சேகரித்தோம்.

FA பக்கங்கள்

பழைய சி.டி, பிளாஸ்டிக் ட்ரே, சாக்லேட் பேப்பர்கள், வண்ணக் காகிதங்கள் என அனைத்தையும் ஓர் இடத்தில் வைத்தோம். எங்களுக்குள் பல குழுக்களை உருவாக்கி, ஒவ்வொரு  குழுவும் ஒவ்வொரு பொருளை உருவாக்குவது என முடிவெடுத்தோம்.

அதன்படி, வண்ணத் தோரணங்கள், விளக்குகள் போன்றவற்றை உருவாக்கினோம். உடைந்த பழைய ட்ரேக்களின் மீது, பழைய அட்டைகளை ஒட்டி, வண்ணக் காகிதங்களையும் ஒட்டினோம். இப்போது அவை எங்களின் புத்தகங்களை வைக்க உதவுகின்றன. பழைய சி.டி-களில் விளக்கு மாடம் தயாரித்தோம்.

FA பக்கங்கள்

எங்களின் இந்தச் செயல்பாடுகளை வியந்து பாராட்டிய ஆசிரியர், முழு மதிப்பீடு அளித்து ஊக்கப்படுத்தினார். 

- ப்ரியதர்ஷினி, ஆஷிகா, சத்தியசீலன், நி.நிவேதா, கணேசன், விஷ்ணுப்ரியா, சரண், செ.நிவேதா, தேவு, திவ்யலெட்சுமி, சிவா,5-ம் வகுப்பு.

ஊ.ஒ.தொ.பள்ளி, சோழங்கநத்தம், பாபநாசம், தஞ்சாவூர்.

 பழங்களாக மாறினோம்!

FA பக்கங்கள்

‘உணவு’ பாடத்துக்காக,  நண்பர்களோடு இணைந்து செய்த சூப்பரான செயல்பாடு.

FA பக்கங்கள்

சார்ட்டுகளில், மாம்பழம், வாழைப்பழம், திராட்சை உள்ளிட்ட சத்துள்ள பழங்களின் படங்களை வரைந்துகொண்டோம். அதற்குப் பொருத்தமான வண்ணங்களையும் தீட்டினோம். பழம் வரையப்பட்ட பகுதியை, கவனமாகக் கத்தரித்துக் கொண்டோம். பழத்தின் மேல் பகுதியில், இரண்டு சின்னத் துளைகள் போட்டோம். அதில், ஒரு துளையில் கயிற்றை நுழைத்து, மறு துளையில் முடிச்சுப் போட்டோம். அந்தக் கயிறு, பையின் கைப்பிடி போல இருந்தது. அதை, எங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு, அந்தப் பழத்தில் கிடைக்கும் சத்துகள் பற்றிக் கூறினோம். ஆசிரியர் எங்களைப் பாராட்டி, மதிப்பீட்டை அள்ளிக் கொடுத்தார்.

- மாம்பழம்: ரோகிணி,வாழை: நிஷா,அன்னாசி: சாதன்யா, திராட்சை: பேபி ஷாலினி, ஸ்ட்ராபெரி: கவிப்பிரியா, ஆப்பிள்: ஹேமப்பிரியா,ஆரஞ்சு: லிங்கேஷ், தர்பூசணி: பாலச்சந்திரன், சப்போட்டா: ஜனனி.

சித்திரைப் பொருட்காட்சி!

FA பக்கங்கள்

‘சித்திரைப் பொருட்காட்சி’ பாடத்துக்காக, பொருட்காட்சியில் கிடைக்கும் பொருட்களைப் பட்டியலிட்டோம். அவற்றை சார்ட்டில் அழகாக வரைந்து, நல்ல மதிப்பீட்டைப் பெற்றோம்.

- சாதனா, மதுமிதா, கார்த்திகா,5-ம் வகுப்பு.

ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஆலாந்துறை, தொண்டாமுத்தூர்.

 விண்ணைத் தாண்டி!

FA பக்கங்கள்

‘விண்ணைத் தாண்டி’ பாடத்துக்கான  செயல்பாடாக, பலவிதமான விண்கலங்களைத் தயார்செய்தோம். அதன் மீது, நமது நாடு அனுப்பியிருக்கும் விண்கலங்களின் பெயர்களை எழுதினோம். ஆசிரியரிடம் காட்டியபோது, ‘இதை எப்படிச் செய்வது என மற்ற மாணவர்களுக்கு விளக்குங்கள்’ என்றார். நாங்களும் செய்முறையைக் கூற, மாணவர்கள்  நோட்டில் குறித்துக் கொண்டார்கள். ஆசிரியர் எங்களுக்கு முழு மதிப்பீடு அளித்து ஊக்குவித்தார். 

- ஆனந்தக் கண்ணன், ஜெயசூர்யா, சச்சின், தமிழரசன், கிருஷ்ணன், 5-ம் வகுப்பு.

செயல்பாடுகளின் கண்காட்சி!

FA பக்கங்கள்

‘பாடத்துக்குத் தொடர்பான செயல்பாடுகளை, உங்களின் கற்பனையைச் சிறகடிக்கச் செய்து, விதவிதமாகச் செய்துவாருங்கள்’ என்று ஆசிரியர் கூறினார். விமானம், வீடு, வாத்து போன்ற பலவற்றைச் செய்துவந்து அசத்தினோம்.

- விஜய், கெளதம், அதீதா, கோகிலா, அவின்ஷா, நிவேதா, கோபிகா, 5-ம் வகுப்பு.

கிராஃப் ஷீட்டில் உருவம்!

FA பக்கங்கள்

கிராஃப் ஷீட்டில் குழுச் செயல்பாடு செய்யத் திட்டமிட்டோம். வரைபடத்தில் புள்ளிகளைக் கணக்கிட்டு, அவற்றைக் கோடுகளால் இணைக்கும்போது, உருவம் கிடைப்பதுபோல செய்து, மதிப்பீடு பெற்றோம்.

- சுலோசனா, ஐஸ்வர்யா, காயத்ரி, தர்ஷினி ப்ரியா, மணிமேகலை, சுபத்ரா, 8-ம் வகுப்பு.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சர்க்கார்கொல்லப்பட்டி, சேலம் ஊரகம்.

புவிக்கோளம்

FA பக்கங்கள்

பிளாஸ்டிக் பந்து ஒன்றை வாங்கி, அதன் மேல் நீல வண்ணக் காகிதத்தை ஒட்டினோம். அதில், உலக வரைபடத்தை வரைந்து, வண்ணம் தீட்டினோம். ஆசிரியரிடம் காண்பித்து, மதிப்பெண் பெற்றோம்.

- ஏ.அனுசுயா, ஏ.ஜெபசீலா,5-ம் வகுப்பு.

 பல்வகை வீடுகள்!

FA பக்கங்கள்

மூங்கில் மற்றும் பிற மரக்குச் சிகளைப் பயன்படுத்தி, குடிசை மற்றும் மாடி வீடுகளை உருவாக்கினோம். அட்டையின் மீது, பஞ்சை ஒட்டி, பனி வீடு தயார்செய்தோம். களிமண் மூலம் குகைகள் அமைத்தோம். ஆசிரியரிடம் காண்பித்து, பாராட்டுப் பெற்றோம்.

-ஏ.காவ்யா, ஆர்.பவித்ரா,    ஏ.அனுசுயா, ஏ.ஜெபசீலா,5-ம் வகுப்பு. 

காகிதத் தட்டில் உருவங்கள்!

FA பக்கங்கள்

காகிதத் தட்டுகளில் பூனை, பொம்மை, பூ, கோமாளி, மரம் ஆகியவற்றை உருவாக்கத் திட்டமிட்டோம். முதலில், காகிதத் தட்டில் வண்ணங்கள் தீட்டினோம். உருவங்களுக்கு ஏற்ப, பாகங்களை அட்டையில் உருவாக்கி, காகிதத் தட்டுடன் இணைத்தோம். இதனை, ஆசிரியரிடம் காண்பித்து, மதிப்பீடு பெற்றோம்.

- கே.விஷ்ணு,எஸ்.உதயக்குமார்,ஆர்.சஞ்சய், 5-ம் வகுப்பு.

மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.

 சுவையான திருவிழா!

FA பக்கங்கள்

‘பழங்கள், காய்கறிகள்’ பாடத்துக்காக,  திருவிழா ஒன்றை நடத்தினோம். வீட்டில் இருந்து காய்கள், பழங்களை எடுத்துவந்து, வகுப்பறையில் கண்காட்சியாக அடுக்கினோம். ஒவ்வொரு காய் மற்றும் பழங்களின் அருகிலும்  அதன் நிறம், சுவை பற்றிய குறிப்புகளை எழுதிவைத்தோம். எங்கள் ஆசிரியர் பாராட்டி, முழு மதிப்பீடு அளித்தார். 

- 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்கள்.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோனேரிக்குப்பம்.

ஆர்கானிக் விமானம்!

FA பக்கங்கள்

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் கிடந்த வாழைமட்டையை அழகாக நறுக்கி, சூப்பரான விமானம் உருவாக்கினேன். ‘இது, புகையைக் கக்காத விமானம் டீச்சர்’ என்று காண்பித்த எனக்கு கிடைத்தது முழு மதிப்பீடு.

- ஜெயகிருஷ்ணன், 5-ம் வகுப்பு.ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கே.ராமநாதபுரம், பவானி.

ஐஸ்குச்சியில் டைனோசர்!

FA பக்கங்கள்

எனக்கு ஐஸ்கிரீம் என்றால், கொள்ளைப் பிரியம். ஐஸ்கிரீம் சாப்பிடும்போதெல்லாம் அதன் குச்சியைப் பத்திரப்படுத்தி வந்தேன். அவற்றை வைத்து, டைனோசர் ஒன்றைச் செய்து பாராட்டு பெற்றேன். அதற்குப் பரிசாக, ஐஸ்கிரீம் பாக்ஸே வாங்கித் தந்தார் என் அப்பா.

- சு.லிங்கேஸ்வரன், 9-ம் வகுப்பு.எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மே.நி.பள்ளி, (ஆண்கள்) ராசிபுரம்.

 காற்றாலை செய்தேன்!

FA பக்கங்கள்

‘மின்உற்பத்தி’ பாடத்துக்காக,  அட்டை, மின்விசிறி, பேட்டரிகளை வைத்து காற்றாலையின் மாதிரியைச் செய்து காட்டி அசத்தினேன்.

- எஸ்.பரமேஷ், 7-ம் வகுப்பு.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுப்பராயன்புதூர், சூலூர்.

சிவப்பு நிற டைனோசர்!

FA பக்கங்கள்

‘உங்கள் கற்பனையில் இருக்கும் உருவத்தை வரையுங்கள்’ என்று ஆசிரியர் கூறியதும், கிருஷ்ணர் மற்றும் டைனோசர் ஓவியங்களை சூப்பராக வரைந்து காட்டினோம். ‘சிவப்பு நிற டைனோசருக்கு முழு மதிப்பீட்டைச் சாப்பிடக் கொடு!’ என்று சிரிப்போடு மதிப்பீடு கொடுத்தார் ஆசிரியர்.

- ஆ.நந்தகுமார், டைனோசர்: நவீன்பாண்டியன், 5-ம் வகுப்பு.

ஊ.ஒ.தொ.பள்ளி, எருக்கலக்கோட்டை, அறந்தாங்கி.

தொகுப்பு: வி.எஸ்.சரவணன்

FA பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism