Published:Updated:

பலூனை ஊதினால் வண்டி நகரும்!

‘காற்று’ பாடத்துக்கு உரியது.

காற்றின் அழுத்தத்தை விளக்கும் இரு சோதனைகளைச் செய்யலாம்.

பலூனை ஊதினால் வண்டி நகரும்!

சோதனை - 1

அட்டையில் சக்கரங்களை இணைத்து, வண்டி ஒன்றை உருவாக்கவும். வளைந்த ஒரு ஸ்ட்ராவை எடுத்து, அந்த வாகனம் மீது ஒட்டவும். ஸ்ட்ராவின் வளைந்த முனையில் ஒரு பலூனை இணைக்கவும். மற்றொரு முனை வழியாக ஊதவும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பலூனை ஊதினால் வண்டி நகரும்!

பலூனில் காற்று நிரப்பியதும், காற்று ஊதிய துளையை விரலால் அடைத்துக்கொள்ளவும். வண்டியைத் தரையில் வைத்து, விரலை எடுக்கவும். காற்று பின்னோக்கி வெளியேற, வாகனம்

பலூனை ஊதினால் வண்டி நகரும்!

முன்னோக்கி வேகமாகச் செல்லும்.

இதுவே, ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு எனும் நியூட்டனின் மூன்றாம் விதி.

சோதனை - 2


இரண்டு குளிர்பானக் கலன்கள் மற்றும் 25 ஸ்ட்ராக்களை எடுத்துக்கொள்ளவும். ஒரு செ.மீ இடைவெளியில் ஸ்ட்ராக்களைச் சீராகப் பரப்பவும். ஸ்ட்ராக்களின் மேல் காலி குளிர்பானக் கலன்களை 5 செ.மீ இடைவெளியில் வைத்து,  கலன்களுக்கு இடையில் வேகமாக ஊதவும். கலன்கள் தனித்தனியே விலகிச் செல்லாமல் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதைக் காணலாம். இதற்குக் காரணம், காற்றை ஊதும்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைகிறது.

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப்  பள்ளி, ஒக்கிலியர் காலனி,கோயம்புத்தூர்.