Published:Updated:

இலக்கணம் அறிவோம்!

இலக்கணப் பகுதிக்கு உரியது.

மின் அட்டைகளில் வண்ணப் பேனாக்களால், தேவையான எழுத்துகளை (உதாரணமாக: ம, ர, ம், வே, ர்,  ப, ற், ல், பொ, டி, +) எழுதிக்கொள்ளவும்.

இலக்கணம் அறிவோம்!

திரிதல் வகை விகாரப் புணர்ச்சி:

ப, ல்  + பொ, டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இலக்கணம் அறிவோம்!

மேற்கண்ட எழுத்துகள் எழுதப்பட்ட மின் அட்டைகளைப் பிடித்துக்கொண்டு, வரிசையில் மாணவர்கள் நிற்க வேண்டும். ‘பல்’ மற்றும் ‘பொடி’ என்ற இரு வார்த்தைகள் இணையும்போது,

இலக்கணம் அறிவோம்!

இடையில் உள்ள  ‘ல்’ என்ற எழுத்து திரிந்து, ‘ற்’ என்ற எழுத்தாக மாறி, ‘பற்பொடி’ என்ற ஒரு வார்த்தையாக மாறிவிடும். ‘ல்’ மற்றும் + அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை விலகச் செய்து, அங்கே ‘ற்’ எழுத்தை வைத்திருக்கும் மாணவர் நிற்க வேண்டும்.

கெடுதல் வகை விகாரப் புணர்ச்சி:

ம, ர, ம், + வே, ர்

மேற்கண்ட எழுத்துகள் எழுதப்பட்ட மின் அட்டைகளைப் பிடித்துக்கொண்டு, வரிசையில் மாணவர்கள் நிற்க வேண்டும். ‘மரம்’ மற்றும் ‘வேர்’ என்ற இரு வார்த்தைகள் இணையும்போது, இடையில் உள்ள  ‘ம்’ என்ற எழுத்து கெட்டு, அதாவது, மறைந்துவிடும்.  ‘மரவேர்’ என ஒரே வார்த்தையாகிவிடும்.

இதேபோல மற்ற வகை புணர்ச்சிகளையும் மாணவர்களுக்கு விளக்கலாம்.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.