Published:Updated:

செல் வகைகள் அறிவோம்!

‘உயிரினங்களின் பல்வகைத் தன்மைகள்’ பாடத்துக்கு உரியது.

தேவையான பொருட்கள்: மின் அட்டைகள், வண்ணப் பேனாக்கள்.

செல் வகைகள் அறிவோம்!
செல் வகைகள் அறிவோம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செய்முறை:நரம்பு செல், சுடர் செல், சுரப்பி செல், தட்டு எபிதீலியம், தூண் எபிதீலியம், அண்ட செல், ரத்த செல்களின் வகைகளைத் தனித்தனி மின் அட்டைகளில் எழுதிக்கொள்ள வேண்டும்.அதன் வடிவங்களைத் தனித்தனி மின் அட்டைகளில் வரைந்துகொள்ள வேண்டும்.

செல் வகைகள் அறிவோம்!

மின் அட்டைகளை மேசையின் மீது தனித்தனியாக வைக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவராக முன்னால் வந்து, செல்களின் வகைகள் எழுதப்பட்ட அட்டைகளின் தொகுப்பில் இருந்து ஒன்றை மட்டும் எடுத்து, (உதாரணமாக: சுரப்பி செல்) மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும்.

மற்றொரு மாணவர், வடிவங்கள் வரையப்பட்ட மின் அட்டைகளின் தொகுப்பில் இருந்து சுரப்பி செல்லின் சரியான வடிவமான, கன சதுரம் வரையப்பட்ட மின் அட்டையை எடுத்துக்கொண்டு, அவர் அருகில் நிற்க வேண்டும். இதேபோல மற்ற செல்களின் வகைகளையும் அதன் வடிவங்களையும் இணைத்துக் காட்டி விளக்கலாம்.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.